அரசியல் செய்தி

தமிழ்நாடு

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சபையில் தீர்மானம்

Added : செப் 09, 2021
Share
Advertisement
சென்னை:மத்திய அரசு கொண்டு வந்த, இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் - 2019ஐ ரத்து செய்ய, மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சட்டசபையில், இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் - 2019ஐ ரத்து செய்யக் கோரும், அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பார்லிமென்டில், 2019 டிச.,19ல், இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் - 2019

சென்னை:மத்திய அரசு கொண்டு வந்த, இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் - 2019ஐ ரத்து செய்ய, மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சட்டசபையில், இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் - 2019ஐ ரத்து செய்யக் கோரும், அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

பார்லிமென்டில், 2019 டிச.,19ல், இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் - 2019 நிறைவேற்றப்பட்டது. உரிமைபாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து, 2014 டிசம்பருக்கு முன், இந்தியாவிற்குள் புலம்பெயர்ந்து குடியேறிய ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள், கிறிஸ்துவர்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்க, இந்த சட்டம் வழிவகை செய்கிறது.கோரிக்கைமுஸ்லிம்கள் இதில் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளனர்.

இது, மக்களை மத ரீதியாக பிரிக் கிறது என்பதால், இந்த சட்டத்தை ஆரம்ப நிலையிலேயே, தி.மு.க., எதிர்த்தது. இந்த சட்டத்தை நிறைவேற்றும் முன், அதை எதிர்த்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க, கோரிக்கை வைத்தோம். அந்த கோரிக்கை முந்தைய அரசால் ஏற்கப்படவில்லை. அகதிகளாக வருவோரை, சக மனிதர்களாக பார்க்க வேண்டும். மத ரீதியிலோ, இன ரீதியிலோ, எந்த நாட்டிலிருந்து வருபவர்கள் என்ற ரீதியிலோ, அவர்களை பிரித்து பார்க்கக் கூடாது.

அதிலும், இந்த சட்டத்தின் வழியே, இலங்கைத் தமிழர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். இலங்கையில் வாழ முடியாமல், தமிழகம் தப்பி வந்து, முகாம்களிலும், வெளியிலும் வாழ்ந்து வருகின்றனர். இங்கு குடியுரிமை பெற்று வாழலாம் என்று நினைப்பவர்கள் உரிமையை, இந்த சட்டம் பறிக்கிறது.

மத்திய அரசு இலங்கைத் தமிழர்கள் குறித்து கவலைப்படவில்லை என்பதை விட, வஞ்சனையுடன் செயல்படுகிறது. அதனால் தான் இதை எதிர்க்க வேண்டி உள்ளது. வெளிநடப்புஇந்திய மக்கள் இடையே, பேதத்தை தோற்றுவிக்க வழிவகை செய்யும், இந்த சட்டத் திருத்தம் தேவையற்றது; ரத்து செய்யப்பட வேண்டியது.

இச்சட்டத்தின் நீட்சியாக, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு தயாரிக்கும் பணியையும், அதன் அடிப்படையில், தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதையும், மத்திய அரசு முழுவதுமாக கைவிட வேண்டும்.இதற்காக, இந்திய ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கேள்விக் குறியாக்கும்,

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை, நிறைவேற்றி தர வேண்டும்.இவ்வாறு, முதல்வர் தீர்மானத்தை முன் மொழிந்தார். அப்போது சட்டசபையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் இல்லை.

தீர்மானத்தை ஆதரித்து, தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன்; கொங்குநாடு மக்கள்

தேசிய கட்சி ஈஸ்வரன்; மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா. இந்திய கம்யூ., ராமச்சந்திரன்; மார்க்சிஸ்ட் கம்யூ., நாகைமாலி; விடுதலை சிறுத்தைகள் கட்சி சிந்தனை செல்வன்; பா.ம.க., ஜி.கே.மணி; காங்., - செல்வப்பெருந்தகை; அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் பேசினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல: நயினார்சட்டசபையில், முதல்வர் முன்மொழிந்த, அரசினர் தனி தீர்மானத்தை எதிர்த்து, பா.ஜ., சட்டசபை தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:

இந்த சட்டம், நுாற்றுக்கு நுாறு இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. கடந்த, 1950ல் நேருவுக்கும், லியாகத் அலிகானுக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் அடிப்படையில், இந்தியாவிலும், பாகிஸ்தானில் வசிக்கும் சிறுபான்மையினருக்கு, கல்வி, அரசியல் என, அனைத்திலும், சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இந்தியாவில் இது கடைப்பிடிக்கப்படுகிறது.

பாகிஸ்தானில் சுதந்திரம் அடைந்த போது, ஹிந்துக்கள் எண்ணிக்கை, 20 சதவீதம். இன்று, 3 சதவீதம். இந்தியாவில் சிறுபான்மை சமுதாயம் பாதுகாக்கப்படுகிறது; பாகிஸ்தானில் பாதுகாக்கப்படவில்லை. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் வசிக்கும் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த கிறிஸ்துவர்கள், பார்சிகள், ஜெயின்கள், ஹிந்துக்கள் போன்றோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இதனால் அங்கிருந்து வந்தவர்களுக்கு, குடியுரிமை வழங்க, இந்த சட்டம் வழிவகை செய்கிறது. மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தில், முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தில், எதிரான கருத்து இருப்பதாக தெரிவித்தால், தமிழக பா.ஜ., குரல் கொடுக்க தயாராக உள்ளது. முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து, வெளிநடப்பு செய்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.

வெளிநடப்பு செய்த பின் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி:

சி.ஏ.ஏ., சட்டத்தில், முஸ்லிம்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. விநாயகர் சதுர்த்தி, தீபாவளி பண்டிகை என, ஹிந்து பண்டிகை எதற்கும், முதல்வர் வாழ்த்து தெரிவித்தது இல்லை. அவர், மத நல்லிணக்கம் குறித்து பேசி உள்ளார்.பிரதமர் மோடி தலைமையில், சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற வகையில், இந்நாட்டு மக்கள் பாதுகாப்போடு வாழ, மத்திய அரசு அனுதினமும் பாடுபட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X