கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்கள் இடமாறுதல் விசாரணை கோரி வழக்கு

Added : செப் 09, 2021
Share
Advertisement
மதுரை:ஆசிரியர்கள் இடமாறுதலில் முறைகேடு நடந்திருப்பதாக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மதுரையைச் சேர்ந்த ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், 2020 - 21ல் பல ஆசிரியர்கள் இடமாறுதல் செய்யப்பட்டனர். இதற்கு, பள்ளிக்கல்வித் துறையில் பெரிய அளவில் லஞ்சம் பெறப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால், இடமாறுதலுக்கு கலந்தாய்வு

மதுரை:ஆசிரியர்கள் இடமாறுதலில் முறைகேடு நடந்திருப்பதாக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், 2020 - 21ல் பல ஆசிரியர்கள் இடமாறுதல் செய்யப்பட்டனர். இதற்கு, பள்ளிக்கல்வித் துறையில் பெரிய அளவில் லஞ்சம் பெறப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால், இடமாறுதலுக்கு கலந்தாய்வு நடத்தவில்லை.உண்மையான காரணம் அடிப்படையில், விரும்பும் இடங்களுக்கு மாறுதலை எதிர்பார்த்த ஆசிரியர்கள் பாதிக்கப் பட்டு உள்ளனர். விதிமீறல் நடந்துள்ளது. லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை கோரி, தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு விசாரித்து, தமிழக உள்துறை செயலர், பள்ளிக்கல்வித் துறை செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி அக்., 27க்கு ஒத்திவைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X