சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருச்சியில் ரூ.1,000 கோடி மோசடி வழக்கு 'எல்பின்' நிறுவன உரிமையாளர்கள் 'எஸ்கேப்'

Added : செப் 09, 2021
Share
Advertisement
திருச்சி:அதிக லாபம், இரட்டிப்பு பணம் தருவதாக கூறி 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த, திருச்சி எல்பின் நிறுவன உரிமையாளர்கள் தலைமறைவாகி விட்டனர்.திருச்சி, மன்னார்புரத்தில் எல்பின் என்ற நிறுவனம், நான்கு ஆண்டுகளுக்கு முன் துவங்கப் பட்டது. இதன் உரிமையாளர்களாக ராஜா, 50; ரமேஷ், 45 ஆகியோர் இருந்தனர்.இவர்கள், தங்கள் நிறுவனத்தில் பணம் டிபாசிட் செய்தால், அதிக வட்டி, குறைந்த
 திருச்சியில் ரூ.1,000 கோடி மோசடி வழக்கு 'எல்பின்' நிறுவன உரிமையாளர்கள் 'எஸ்கேப்'

திருச்சி:அதிக லாபம், இரட்டிப்பு பணம் தருவதாக கூறி 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த, திருச்சி எல்பின் நிறுவன உரிமையாளர்கள் தலைமறைவாகி விட்டனர்.

திருச்சி, மன்னார்புரத்தில் எல்பின் என்ற நிறுவனம், நான்கு ஆண்டுகளுக்கு முன் துவங்கப் பட்டது. இதன் உரிமையாளர்களாக ராஜா, 50; ரமேஷ், 45 ஆகியோர் இருந்தனர்.இவர்கள், தங்கள் நிறுவனத்தில் பணம் டிபாசிட் செய்தால், அதிக வட்டி, குறைந்த காலத்தில் இரட்டிப்பு பணம் என பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர்.

திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தனர். ஆனால், அவர்கள் கூறிய படி, டிபாசிட் முதிர்ச்சி அடைந்தும், பணத்தை திருப்பித் தரவில்லை.இது குறித்து, பலர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளனர். திருச்சியைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரில், எல்பின் நிர்வாகிகள் நான்கு பேர், சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உரிமையாளர்களான ராஜாவும், ரமேஷும் தலைமறைவாகி விட்டனர். இதனால், பணத்தை டிபாசிட் செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்து, நேற்று எல்பின் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.அவர்கள் கூறியதாவது:நாங்கள் சிறுக, சிறுக சேர்த்து வைத்த பணத்தை டிபாசிட் செய்தோம். முதிர்ச்சி அடைந்தும் பணத்தை தர மறுக்கின்றனர். பிரச்னை செய்தால் அடியாட்களை வைத்து மிரட்டுகின்றனர். போலீசுக்கு சென்றால்,

பணம் கிடைக்காது என, அதன் உரிமையாளர் ராஜா வெளிப்படையாகவே கூறுகிறார்.நாங்கள் கட்டிய பணம் கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டோம். நாங்கள் மட்டும், 3.5 கோடி ரூபாய் டிபாசிட் செய்துள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.பொதுமக்களிடம் டிபாசிட் வாங்கிய பணத்தை, பல வகைகளில் ஆடம்பரமாக செலவு செய்த ராஜாவும், ரமேஷும் கடைசி யாக திரைப்படத் துறையில் காலடி பதித்து, நடிகர் விமலை வைத்து படம் எடுத்துள்ளனர்.
இதில் ராஜா பா.ஜ., கட்சியிலும், ரமேஷ் வி.சி., கட்சியில் மாநில பொறுப்பிலும் உள்ளனர்.


மிரட்டல் 'ஆடியோ'



இந்நிலையில், தலைமறைவாக உள்ள எல்பின் உரிமையாளர் ராஜா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், 'பணத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறோம். இம்மாத இறுதிக்குள் தந்து விடுவோம். என் மீது புகார் கொடுத்தால், அவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன். சட்டப்படியும் பார்த்துக் கொள்கிறேன்.'ஆகையால், இம்மாத இறுதி வரை காத்திருங்கள். அனைவருக்கும் பணம் தருகிறேன்' என, மிரட்டும் தொனியில் பேசி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X