அரசியல் செய்தி

தமிழ்நாடு

நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பு கலெக்டர்களுக்கு கூடுதல் அதிகாரம்

Added : செப் 09, 2021
Share
Advertisement
சென்னை:தொழில் துவங்கும் நோக்கங்களுக்கு, நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பை வழங்க, கலெக்டருக்கு அதிகாரம் வழங்கும் மசோதா, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தமிழக சட்டசபையில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மசோதாவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின், 1997ம் ஆண்டு தொழில் நோக்கங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில், அதற்கான அறிவிப்பு வழங்கும்

சென்னை:தொழில் துவங்கும் நோக்கங்களுக்கு, நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பை வழங்க, கலெக்டருக்கு அதிகாரம் வழங்கும் மசோதா, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மசோதாவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின், 1997ம் ஆண்டு தொழில் நோக்கங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில், அதற்கான அறிவிப்பு வழங்கும் அதிகாரம், நிலம் கையகப்படுத்துவதை திரும்ப பெறுதல் மற்றும் அதற்கான விதிகளை மேற்கொள்வது ஆகியவற்றை தவிர, மற்ற அதிகாரங்கள் கலெக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தொழில் நோக்கங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை விரைவுபடுத்தும் வகையில், நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பை வழங்கும் அதிகாரம், கலெக்டர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 'தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் பெயர், மனிதவள மேலாண்மை துறை என்று மாற்றப்படும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X