சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.346 கோடி டெண்டர் முறைகேடு லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

Added : செப் 09, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாநகராட்சியில், 346 கோடி ரூபாய், 'டெண்டர்' முறைகேடு புகார் தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 2018க்கு முன்பு வரை, சென்னை மாநகராட்சியில் 464 கோடி ரூபாய், கோவை மாநக ராட்சியில் 346 கோடி ரூபாய்க்கு டெண்டர் வழங்கியதில், முறைகேடு செய்திருப்பதாக, தி.மு.க., அமைப்பு செயலர் பாரதி மற்றும் சிலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

கோவை:கோவை மாநகராட்சியில், 346 கோடி ரூபாய், 'டெண்டர்' முறைகேடு புகார் தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 2018க்கு முன்பு வரை, சென்னை மாநகராட்சியில் 464 கோடி ரூபாய், கோவை மாநக ராட்சியில் 346 கோடி ரூபாய்க்கு டெண்டர் வழங்கியதில், முறைகேடு செய்திருப்பதாக, தி.மு.க., அமைப்பு செயலர் பாரதி மற்றும் சிலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.லஞ்ச ஒழிப்பு துறையிலும் புகார் கொடுத்தனர்.ஆக., 10ல், முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடு மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார் 'ரெய்டு' நடத்தினர்.

கோவை மாநகராட்சியில் மட்டும், 346 கோடி ரூபாய்க்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு சொல்லப்பட்டுள்ளது. ஆனால், குறிப்பிட்ட 12 நிறுவனங்களுக்கு 697 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.அதனால், டெண்டர் இறுதி செய்யப்பட்டது, பணம் விடுவித்தது தொடர்பாக விசாரிக்க, சென்னையில் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கோவை வந்தனர்.

மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், நகர பொறியாளர் லட்சுமணன், நிர்வாக பொறியாளராக கூடுதல் பொறுப்பு வகித்த சரவணகுமார், நிர்வாக பொறியாளர்கள் பார்வதி மற்றும் ஞானவேல் உள்ளிட்டோரிடம் முதல் கட்டமாக விசாரணை நடத்தினர். அடுத்த கட்டமாக, உதவி நிர்வாக பொறியாளர்கள் மற்றும் உதவி, இளம் பொறியாளர்களை விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

உதவி கமிஷனர் - நிர்வாகம், சரவணனிடம் விசாரித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கோவை மாநகராட்சியின் டெண்டர் நடைமுறை, பொறியியல் பிரிவு அதிகாரிகள் பட்டியல் மற்றும் மாநகராட்சி சட்ட விதிமுறை புத்தகங்களை பெற்றுச் சென்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X