சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாத்துார் அருகே விபத்து சிவகாசியை சேர்ந்த மூவர் பலி

Added : செப் 09, 2021
Share
Advertisement
சாத்துார்:சாத்துார் அருகே புல்வாய்பட்டி விலக்கு நான்கு வழிச்சாலையில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர ஓடை தடுப்புக்கம்பியில் மோதியதில் சிவகாசியை சேர்ந்த சிறுமி, இரு பெண்கள் பலியாகினர்.சிவகாசியை சேர்ந்தவர் சண்முகவேல் 53. மளிகை கடை நடத்தி வரும் இவர், குடும்பத்தினருடன் கயத்தாறு சென்று விட்டு நேற்று மதியம் 3:45 மணிக்கு சிவகாசி திரும்பினர். காரை சண்முகவேல்

சாத்துார்:சாத்துார் அருகே புல்வாய்பட்டி விலக்கு நான்கு வழிச்சாலையில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர ஓடை தடுப்புக்கம்பியில் மோதியதில் சிவகாசியை சேர்ந்த சிறுமி, இரு பெண்கள் பலியாகினர்.

சிவகாசியை சேர்ந்தவர் சண்முகவேல் 53. மளிகை கடை நடத்தி வரும் இவர், குடும்பத்தினருடன் கயத்தாறு சென்று விட்டு நேற்று மதியம் 3:45 மணிக்கு சிவகாசி திரும்பினர். காரை சண்முகவேல் ஓட்டி வந்தார். சாத்துார் அருகே நான்கு வழிச்சாலை புல்வாய்பட்டி விலக்கில் வந்த போது நிலைதடுமாறிய கார், ரோட்டோர ஓடை பாலம் தடுப்பு கம்பியில் மோதியது.

காரில் இருந்த ஆவுடையம்மாள் 50, சிவகாசி சாரதா நகரை சேர்ந்த முருகன் மனைவி தனலட்சுமி 52, சரவணப்பிரியா 10, பலியாகினர். காயமுற்ற சண்முகவேல், முருகன் 48, சாத்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X