சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழநி மாணவனுக்கு கொரோனா பாதிப்பு

Added : செப் 09, 2021
Share
Advertisement
நெய்க்காரபட்டி:திண்டுக்கல் மாணவி ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்திய நிலையில், நேற்று பழநியில் பள்ளி மாணவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநி நெய்க்காரப்பட்டி தனியார் பள்ளியில் திருப்பூர் மாவட்டம், கொழுமத்தை சேர்ந்த மாணவன் படித்து வருகிறார். சமீபத்தில் பள்ளி திறந்த நிலையில் அவருக்கு

நெய்க்காரபட்டி:திண்டுக்கல் மாணவி ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்திய நிலையில், நேற்று பழநியில் பள்ளி மாணவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி நெய்க்காரப்பட்டி தனியார் பள்ளியில் திருப்பூர் மாவட்டம், கொழுமத்தை சேர்ந்த மாணவன் படித்து வருகிறார். சமீபத்தில் பள்ளி திறந்த நிலையில் அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால் அம்மாணவன் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து அப் பள்ளியில் படிக்கும் 130 மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் பேரூராட்சி, கல்வித்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் பள்ளியை ஆய்வு செய்தனர். பள்ளி வளாகம் சுத்தம் செய்யப்பட்டது. தற்போது பள்ளி தற்காலிகமாக செயல்படாமல் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X