கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோவில் நிலத்தில் சாலைஅகற்ற ஐகோர்ட் 'கெடு'

Added : செப் 09, 2021
Share
Advertisement
மதுரை:கோவில் நிலத்தில் அனுமதியின்றி அமைத்த சாலையை அகற்ற, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி செல்வம் தாக்கல் செய்த மனு:சிவகங்கை மாவட்டம், திருப்பத்துார் அருகே, என் சொந்த ஊர் பூலாங்குறிச்சியில் வசிக்கிறேன். அங்கு, உருமன் சுவாமி கோவில் உள்ளது. என் முன்னோர் பூசாரிகளாக இருந்தனர். கோவில், அறநிலையத் துறையின் கீழ்

மதுரை:கோவில் நிலத்தில் அனுமதியின்றி அமைத்த சாலையை அகற்ற, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி செல்வம் தாக்கல் செய்த மனு:சிவகங்கை மாவட்டம், திருப்பத்துார் அருகே, என் சொந்த ஊர் பூலாங்குறிச்சியில் வசிக்கிறேன். அங்கு, உருமன் சுவாமி கோவில் உள்ளது. என் முன்னோர் பூசாரிகளாக இருந்தனர். கோவில், அறநிலையத் துறையின் கீழ் உள்ளது.பாரம்பரிய பழக்க வழக்கப்படி, கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் சாலை அமைக்க அனுமதி இல்லை.

ஆனால், சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், கோவிலின் புனிதத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படும். நாச்சியார்புரம் அறநிலையத் துறை ஆய்வாளரிடம் புகார் செய்தேன். சாலையை அகற்ற உத்தரவிட்டார். அதை நிறைவேற்ற நடவடிக்கை இல்லை. அறநிலையத் துறை ஆய்வாளர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு, குறிப்பிட்டார்.நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ''சாலையை 30 நாட்களில் அகற்ற, திருப்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர், பூலாங்குறிச்சி ஊராட்சி தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X