கோடநாடு வழக்கு இருவரிடம் விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோடநாடு வழக்கு இருவரிடம் விசாரணை

Added : செப் 09, 2021
Share
ஊட்டி:கோத்தகிரி கோடநாடு வழக்கில் இருவரிடம், இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் பங்களா கொலை, கொள்ளை வழக்கு விசாரணை, ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. மேல் விசாரணைக்கு தடை கோரிய மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ததை அடுத்து, விசாரணை வேகம் பிடித்துள்ளது.நேற்று காலை, மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர், டி.ஐ.ஜி., முத்துசாமி ஆகியோர், தனிப்படை

ஊட்டி:கோத்தகிரி கோடநாடு வழக்கில் இருவரிடம், இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் பங்களா கொலை, கொள்ளை வழக்கு விசாரணை, ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. மேல் விசாரணைக்கு தடை கோரிய மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ததை அடுத்து, விசாரணை வேகம் பிடித்துள்ளது.நேற்று காலை, மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர், டி.ஐ.ஜி., முத்துசாமி ஆகியோர், தனிப்படை குழுவினருடன் இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தினர்.

தொடர்ந்து, ஊட்டி பழைய எஸ்.பி., அலுவலகத்தில், டி.ஐ.ஜி., முத்து சாமி தலைமையில், நீலகிரி எஸ்.பி., ஆசிஷ் ராவத் மற்றும் தனிப்படையினர், வழக்கில், 41வது சாட்சியான கார் உரிமையாளர் நவுசத், 42வது சாட்சியான புரோக்கர் நவ்புல் ஆகியோரிடம் விசாரித்து, வீடியோவில் பதிவு செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X