அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., ஆட்சியில் பள்ளி, விடுதிகள் மூடல்

Added : செப் 09, 2021
Share
Advertisement
சட்டசபையில், தி.மு.க., - எம்.எல்.ஏ., தாயகம் கவி பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில், ஆதிதிராவிடர் நலத்துறைக்கு எதுவும் செய்யவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில், 305 ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், 53 ஆயிரத்து, 907 மாணவர்கள் பள்ளிக்கு வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அ.தி.மு.க., ஆட்சியில், 333 விடுதிகள் மூடப்பட்டன. இதனால், 33 ஆயிரத்து, 215 மாணவ, மாணவியர் விடுதியில் சேர

சட்டசபையில், தி.மு.க., - எம்.எல்.ஏ., தாயகம் கவி பேசியதாவது:

அ.தி.மு.க., ஆட்சியில், ஆதிதிராவிடர் நலத்துறைக்கு எதுவும் செய்யவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில், 305 ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், 53 ஆயிரத்து, 907 மாணவர்கள் பள்ளிக்கு வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அ.தி.மு.க., ஆட்சியில், 333 விடுதிகள் மூடப்பட்டன. இதனால், 33 ஆயிரத்து, 215 மாணவ, மாணவியர் விடுதியில் சேர முடியவில்லை. எனவே, விடுதிகளை மேம்படுத்த, சிறப்பு மூலதனக் கூறாக, 25 கோடி ரூபாயை, முதல்வர் ஒதுக்கி உள்ளார்.

ஆதிதிராவிட சமுதாயத்தில் பிறந்து, மதம் மாறும்போது, பி.சி., என்று குறிப்பிடுகின்றனர். இதனால், ஆதிதிராவிடருக்குரிய சலுகைகளைப் பெற முடியவில்லை. மதம் என்பது அவர்கள் மனம் சார்ந்தது. மதம் மாறினாலும், அவர்களுக்குரிய உரிமைகளைப் பெற, வழி செய்ய வேண்டும். அதேபோல் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், இதே நிலை உள்ளது. கடந்த ஆட்சியில், எம்.எல்.ஏ.,க்களுக்கு அடையாள அட்டையில், எம்.எல்.ஏ., பெயர், தொகுதி பெயர் அச்சிடப்பட்டிருந்தது.

தனித்தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் அடையாள அட்டையில், தொகுதி பெயருடன், எஸ்.சி., என குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறு குறிப்பிடுவது, அவர்களை தனிமைப்படுத்துவதாக உள்ளது. இந்த முறையை நீக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X