தி.மு.க., உறுப்பினராக உதயசூரியனில் போட்டி விழுப்புரம் எம்.பி., ரவிகுமார் ஐகோர்ட்டில் மனு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., உறுப்பினராக உதயசூரியனில் போட்டி விழுப்புரம் எம்.பி., ரவிகுமார் ஐகோர்ட்டில் மனு

Added : செப் 09, 2021
Share
சென்னை:தி.மு.க.,வைச் சேர்ந்தவன் என்ற முறையில், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், விழுப்புரம் எம்.பி.,யான ரவிகுமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.தேசிய மக்கள் கட்சி தலைவர், எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனு:கடந்த, 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், இந்திய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பாரிவேந்தர்; விடுதலை சிறுத்தைகள் கட்சியைச்

சென்னை:தி.மு.க.,வைச் சேர்ந்தவன் என்ற முறையில், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், விழுப்புரம் எம்.பி.,யான ரவிகுமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தேசிய மக்கள் கட்சி தலைவர், எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனு:கடந்த, 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், இந்திய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பாரிவேந்தர்; விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவிகுமார்; ம.தி.மு.க.,வைச் சேர்ந்த கணேசமூர்த்தி; கொங்கு மக்கள் கட்சியைச் சேர்ந்த சின்னராஜ் ஆகியோர் போட்டியிட்டு, வெற்றி பெற்றனர்.

இவர்கள் அனைவரும், தி.மு.க., சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ளவர், அதில் இருந்து விலகாமல், மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதம்.எனவே, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, இந்த எம்.பி.,க்களின் வெற்றி செல்லாது என, அறிவிக்க வேண்டும்.

இதுகுறித்து, தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், நடவடிக்கை இல்லை.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இவ்வழக்கில், வெற்றி பெற்ற எம்.பி.,க்கள் பதில் அளிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, ஈரோடு எம்.பி.,யான கணேசமூர்த்தி தாக்கல் செய்த பதில் மனுவில், தி.மு.க., உறுப்பினராக இருப்பதாக கூறியிருந்தார்.

இதையடுத்து, விழுப்புரம் எம்.பி.,யான ரவிகுமார் தாக்கல் செய்த பதில் மனு:தவறான தகவல் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளரை, தி.மு.க., வேட்பாளராக தவறாக அறிவித்து விட்டதாக, மனுதாரர் கூறியுள்ளார். அது, சரியல்ல.எனது தேர்தலை, மறைமுகமாக எதிர்த்துள்ளார். அதற்கு, தேர்தல் வழக்கு தான் தொடர வேண்டும். எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்புடையதல்ல.

நான், தி.மு.க.,வைச் சேர்ந்தவன்; கட்சி உறுப்பினர் என்ற முறையில், தேர்தலில் போட்டியிட்டேன். தேர்தல் அதிகாரிக்கு அளித்த படிவத்தில், சரியான விபரங்கள் தான் அளிக்கப்பட்டுள்ளன. தி.மு.க., உறுப்பினர் என்ற முறையில் தான் வேட்புமனு தாக்கல் செய்து, தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டுள்ளேன்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, தேர்தல் தொடர்பான எந்த பிரச்னைக்கும், தேர்தல் வழக்கு தான் தொடர முடியும். இந்த வழக்கை, அபராதம் விதித்து, தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X