இமானுவேல் சேகரன் நினைவு நாள்; கலெக்டர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இமானுவேல் சேகரன் நினைவு நாள்; கலெக்டர் ஆய்வு

Added : செப் 09, 2021
Share
பரமக்குடி : இமானுவேல் சேகரன் நினைவு நாள் செப்.11ல் ஒவ்வொரு ஆண்டும் பரமக்குடியில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அவர் கூறியதாவது: இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி, 4500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி., கேமரா மூலம்

பரமக்குடி : இமானுவேல் சேகரன் நினைவு நாள் செப்.11ல் ஒவ்வொரு ஆண்டும் பரமக்குடியில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அவர் கூறியதாவது: இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி, 4500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி., கேமரா மூலம் கண்காணிப்பு மற்றும் 30 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுஉள்ளது. வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் ஒவ்வொரு அமைப்பினர் சார்பில் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்படும், என்றார்.

பரமக்குடி ஆர்.டி.ஓ., தங்கவேல், மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் கேசவதாசன், மாவட்ட எஸ்.பி., கார்த்திக், டி.எஸ்.பி., வேல்முருகன், தாசில்தார் தமிம்ராஜா, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) அய்யனார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல் மாறன், பி.டி.ஓ., சண்முகநாதன், பரமக்குடி தேவேந்திர பண்பாட்டுக் கழக தலைவர்பரம்பைபாலா, செயலாளர் செல்வகுமார் மற்றும்பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X