பொது செய்தி

தமிழ்நாடு

நிலுவை தொகை பட்டுவாடா கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி

Added : செப் 09, 2021
Share
Advertisement
மடத்துக்குளம் : மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு, நிலுவைத்தொகை, 10 கோடியே 86 லட்சம் ரூபாய் அரசால் வழங்கப்பட்டது. இந்த ஆலையில், 2020-21 ஆம் ஆண்டு கரும்பு அரவை ஏப்., 16ல் தொட ங்கி, ஜூலை 1ம் தேதி நிறைவடைந்தது. அங்கு, 63,560 டன் கரும்பு அரவை செய்யப்பட்டது.ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, டன் ஒன்றுக்கு, 2,707 ரூபாய் 50 பைசா வீதம், மொத்தம், 17 கோடியே 20

மடத்துக்குளம் : மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு, நிலுவைத்தொகை, 10 கோடியே 86 லட்சம் ரூபாய் அரசால் வழங்கப்பட்டது.

இந்த ஆலையில், 2020-21 ஆம் ஆண்டு கரும்பு அரவை ஏப்., 16ல் தொட ங்கி, ஜூலை 1ம் தேதி நிறைவடைந்தது. அங்கு, 63,560 டன் கரும்பு அரவை செய்யப்பட்டது.ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, டன் ஒன்றுக்கு, 2,707 ரூபாய் 50 பைசா வீதம், மொத்தம், 17 கோடியே 20 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். ஏப்., 16ம் தேதி தொடங்கி மே 21ம் தேதி வரை கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, கிரையத்தொகையாக, 5 கோடியே 77 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.பின்பு மே 22ம் தேதி தொடங்கி அரவை நிறைவடையும் வரை, கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, 11 கோடியே 43 லட்சம் ரூபாய் வழங்கப்படாமல் நிலுவையாக இருந்தது.

இதில், 57 லட்சம் ரூபாய், கடந்த மாதம் பட்டுவாடா செய்யப்பட்டது. பாக்கித்தொகை வழங்கப்படாமல் நிலுவையாக இருந்தது. இதனால் விவசாயிகள் நடப்பாண்டு சாகுபடி செய்ய முடியாமல் சிரமப்பட்டனர். நிலுவைத்தொகையை வழங்கும்படி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.கோரிக்கையை ஏற்ற அரசு, கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வழிவகை கடனாக, 10 கோடியே 86 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து அனைத்து விவசாயிகளுக்கும், நிலுவை இன்றி முழுமையான கரும்பு கிரையத்தொகை வங்கிக்கணக்கில் சேர்க்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X