கோர்ட் செய்தி

தமிழ்நாடு

திறனறி தேர்வு: தமிழில் நடத்த வழக்கு

Added : செப் 09, 2021
Share
Advertisement
மதுரை:அறிவியல் திறனறித் தேர்வை மாநில மொழிகளில் நடத்த கோரிய வழக்கில், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.ராமநாதபுரம் மாவட்டம், மோர்ப்பண்ணையைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனு: மத்திய அரசு சார்பில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு அறிவியல் திறனறி தேர்வு நவ., 7ல் நடக்கிறது. இது ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில்

மதுரை:அறிவியல் திறனறித் தேர்வை மாநில மொழிகளில் நடத்த கோரிய வழக்கில், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், மோர்ப்பண்ணையைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனு: மத்திய அரசு சார்பில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு அறிவியல் திறனறி தேர்வு நவ., 7ல் நடக்கிறது. இது ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிகளில் 60 சதவீத மாணவர்கள் தமிழ்வழியில் படிக்கின்றனர்.

அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு நடத்தினால்தான் நோக்கம் நிறைவேறும். ஆங்கிலம், ஹிந்தியில் மட்டும் தேர்வு நடத்தினால், அடித்தட்டு மாணவர்களின் அறிவியல் கனவு சிதைந்துவிடும். மத்திய அரசின் யு.பி.எஸ்.சி., உட்பட பல்வேறு தேர்வுகள் மாநில மொழிகளில் நடக்கின்றன.

அந்தந்த மாநில மாணவர்களின் கனவை நிறைவேற்ற, அறிவியல் திறனறித் தேர்வை அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் நடத்த வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலர், தேசிய ஆலோசனைக்குழு தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பி, அக்., 25க்கு ஒத்தி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X