பொது செய்தி

தமிழ்நாடு

'நம்ம ஊரு'லயே 'நீட்' மையம்!

Added : செப் 09, 2021
Share
Advertisement
திருப்பூர் : வேறு மாவட்டம் சென்று வந்த மாணவ, மாணவிகளுக்கு, திருப்பூர் மாவட்டத்திலேயே, இந்த முறை 'நீட்' தேர்வு எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது; தேர்வு மையங்கள் தயாராகியுள்ளன.மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வு, வரும் 12ம் தேதி நடக்கிறது; நாடு முழுவதும், 202 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முறை, 16 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலை யில், கூடுதல் 'நீட்' மையங்கள்

திருப்பூர் : வேறு மாவட்டம் சென்று வந்த மாணவ, மாணவிகளுக்கு, திருப்பூர் மாவட்டத்திலேயே, இந்த முறை 'நீட்' தேர்வு எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது; தேர்வு மையங்கள் தயாராகியுள்ளன.

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வு, வரும் 12ம் தேதி நடக்கிறது; நாடு முழுவதும், 202 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முறை, 16 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலை யில், கூடுதல் 'நீட்' மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.திருப்பூர் மாவட்டத்தில், ஜெயந்தி மெட்ரிக் பள்ளி - சின்னக்கரை, டீ பப்ளிக் பள்ளி - அவிநாசி, லிட்டில் கிங்டம் பள்ளி - சோளிபாளையம், சசூரி இன்ஜி., கல்லுாரி - விஜயமங்கலம், ஏ.வி.பி., கலை அறிவியல் கல்லுாரி - பூண்டி, மஹாராணி கலை அறிவியல் கல்லுாரி - தாராபுரம், ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லுாரி - உடுமலை, வித்யாசாகர் பப்ளிக் பள்ளி - கூலிபாளையம் ஆகிய, எட்டு மையங்களிலும், 3 ஆயிரத்து, 28 பேர் தேர்வெழுத உள்ளனர். இவர்களில், 720 பேர் அரசு பள்ளி மாணவர்கள்.இம்முறை, 100 கி.மீ., வரை பயணித்து தேர்வு எழுத வேண்டிய சூழல் திருப்பூர் மாவட்ட தேர்வர்களுக்கு இல்லை. ஹால் டிக்கெட், 'neet.nta.nic.in' என்ற இணையதளத்தில் வெளியான நிலையில், நேற்று முன்தினம் முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

தேர்வை மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைத்து நடத்தி முடிக்கும் பொறுப்பு, பெருமாநல்லுாரிலுள்ள கே.எம்.சி., பப்ளிக் பள்ளிக்கு, தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.,) வழங்கியுள்ளது.ஒரு அறைக்கு 12 பேர்திருப்பூர் நகரப்புற 'நீட்' ஒருங்கிணைப்பாளரும், கே.எம்.சி., பப்ளிக் பள்ளி முதல்வருமான நாகமணி கூறியதாவது:கொரோனாவுக்கு இடையில், 'நீட்' தேர்வு நடத்தப்படுவதால் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம். தேர்வு மைய வளாகம் உட்புறம், வெளிப்புறம் இரண்டிலும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம். தேர்வு, மதியம், 2:00 முதல், 5:00 மணி வரை நடக்கிறது. மாணவர்களை காலை, 11:00 மணி முதலே வர துவங்கி விடுவர். சமூக இடைவெளி கருதி ஒவ்வொரு அரைமணி நேரத்துக்கு, ஒரு குழு என்ற முறையில் மாணவர்களை வரவழைக்க ஏற்பாடு செய்துள்ளோம். ஒரு அறைக்கு, 12 பேர் மட்டுமே அமர்ந்து தேர்வெழுதுவர்.'வீடியோ' பதிவுவளாகத்துக்குள் நுழைந்ததும் ஹால் டிக்கெட் ஆய்வு மற்றும் தெர்மல் ஸ்கேன் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். வெப்பநிலை, 97.7 மேல் இருப்பின், அவர்கள் தனியறையில் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.அங்கு கண்காணிப்பாளர் பி.பி.இ., உடையில் இருப்பார். 'மெட்டர் டிடெக்டர்' கருவி மூலமாக பரசோதனைக்கு சிறப்பு குழுவினர் வருகை புரிகின்றனர். அனைத்து சோதனைகளும் வீடியோவாக எடுக்கப்படும். மாணவியருக்கு மட்டும் விதிவிலக்கு. கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், போலீஸ் கமிஷனர், தலைமையில் அனைத்துவித பாதுகாப்புகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இவற்றுக்கு அனுமதி ஹால் டிக்கெட், ஆதார் கார்டு புகைப்படம் (விண்ணப்ப படிவத்தில் உள்ள அதே படம்) 50 மி.லி., சானிடைசர் உட்பக்கம் தெளிவாக தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில் முக கவசம், கையுறை மாற்றுத்திறனாளி எனில் அதற்கான சான்றிதழ்கட்டுப்பாடுகள் அனைத்து ஆபரணங்கள், லெக்கின்ஸ், ஜீன்ஸூக்கு தடை குறைவான உயரம் கொண்ட காலணிக்கு அனுமதி, ஷூ உட்பட மூடப்பட்ட காலணி கூடாது. லேசான அரைக்கை மற்றும் முழுக்கை ஆடைகளுக்கு அனுமதி இல்லை. மதம் மற்றும் சமூக பழக்கவழக்கம் சார்ந்த ஆடை களை அணிந்திருக்கும் தேர்வர்கள், கட்டாயம் சோதனை செய்யப்படுவர். அவர்கள் சீக்கிரமாக தேர்வு அறைக்கு வரவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X