பொது செய்தி

தமிழ்நாடு

43 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசும்

Added : செப் 09, 2021
Share
Advertisement
ஆனைமலை : பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், சூறைக்காற்றுடன் லேசான மழை பெய்யுமென, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் அறிக்கை:பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு, ஆனைமலை ஒன்றியங்களில், வரும், 14ம் தேதி வரையில், ஐந்து மி.மீ., வரையில் லேசான மழை பெய்யும். அதேசமயம், நான்கு ஒன்றியங்களிலும் அதிகபட்சமாக, 43.2

ஆனைமலை : பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், சூறைக்காற்றுடன் லேசான மழை பெய்யுமென, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் அறிக்கை:பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு, ஆனைமலை ஒன்றியங்களில், வரும், 14ம் தேதி வரையில், ஐந்து மி.மீ., வரையில் லேசான மழை பெய்யும். அதேசமயம், நான்கு ஒன்றியங்களிலும் அதிகபட்சமாக, 43.2 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசும்.பகல் நேரத்தில் காற்றில், 90 சதவீதம் வரையில் ஈரப்பதம் இருக்கும். கரும்பு, வாழை மற்றும் மரப்பயிர்களுக்கு, கட்டாயம் முட்டுக்கொடுத்து பாதுகாக்க வேண்டும்.

மழையை பயன்படுத்தி அடுத்த பருவத்துக்கான, சோளம், மக்காச்சோளம், நிலக்கடலை உள்ளிட்ட தீவனப்பயிர்கள் சாகுபடியை துவங்கலாம்.மாறிவரும் தட்பவெப்ப நிலையால், கால்நடைகளுக்கு கோமாரி நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. கோமாரி நோய் வருவதை தவிர்க்க, கால்நடைகளுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்த வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X