கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் மீதான மோசடி வழக்கு முடித்து வைத்தது சிறப்பு கோர்ட்

Added : செப் 09, 2021
Share
Advertisement
சென்னை:பண மோசடி தொடர்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட ஒரு வழக்கை முடித்து வைத்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கரூர் தொகுதியைச் சேர்ந்தவர் தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி. தற்போது மின் துறை அமைச்சராக உள்ளார். இவர், 2011 - 2015ல், அ.தி.மு.க., அரசில் போக்கு வரத்து அமைச்சராக இருந்தார்.வழக்குப்பதிவுஅப்போது, வேலை வாங்கி தருவதாக கூறி, 81 பேரிடம், 1.62

சென்னை:பண மோசடி தொடர்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட ஒரு வழக்கை முடித்து வைத்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் தொகுதியைச் சேர்ந்தவர் தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி. தற்போது மின் துறை அமைச்சராக உள்ளார். இவர், 2011 - 2015ல், அ.தி.மு.க., அரசில் போக்கு வரத்து அமைச்சராக இருந்தார்.


வழக்குப்பதிவு

அப்போது, வேலை வாங்கி தருவதாக கூறி, 81 பேரிடம், 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, சென்னை, அம்பத்துாரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர், செந்தில் பாலாஜி உட்பட நான்கு பேர் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, செந்தில்பாலாஜி, அன்னராஜ், பிரபு, சகாயராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மோசடி தொடர்பாக மேலும் இரு வழக்குகளை, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில், மத்திய குற்றப் பிரிவு போலீசார் தொடர்ந்தனர். இந்த வழக்குகளும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.

இதில் ஒரு வழக்கில், செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், சண்முகம், ராஜ்குமார் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, 'இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டது. உத்தரவு நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.


உத்தரவு

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நீதிபதி என்.ஆலிசியா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்தது தொடர்பான, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X