பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய் கோட்டத்தில் 29 பேருக்கு கொரோனா

Added : செப் 09, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, 29 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சி எல்.ஐ.ஜி., காலனி, நியூ அழகப்பா லே - அவுட், அனுமந்தராயர் கோவில் வீதி, ராஜாமில் ரோடு, வெங்கடேசா காலனி பகுதிகளை சேர்ந்த, 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.வடக்கு ஒன்றியம், ஆவலப்பம்பட்டி, புரவிபாளையம், ஆதியூர், குள்ளக்காபாளையம், ஆச்சிபட்டியில்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, 29 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.

பொள்ளாச்சி நகராட்சி எல்.ஐ.ஜி., காலனி, நியூ அழகப்பா லே - அவுட், அனுமந்தராயர் கோவில் வீதி, ராஜாமில் ரோடு, வெங்கடேசா காலனி பகுதிகளை சேர்ந்த, 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.வடக்கு ஒன்றியம், ஆவலப்பம்பட்டி, புரவிபாளையம், ஆதியூர், குள்ளக்காபாளையம், ஆச்சிபட்டியில் தலா ஒருவர்; சேரன் நகரில் இரண்டு பேர் என, ஏழு பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.தெற்கு ஒன்றியத்தில், சின்னாம்பாளையம், குறுஞ்சேரி, ஜமீன் ஊத்துக்குளியில் தலா ஒருவர் என மூன்று பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

பொள்ளாச்சி தாலுகாவில், நேற்று, மொத்தம், 20 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளானார்கள்.கிணத்துக்கடவு தாலுகாவில், காளியண்ணன்புதுாரில் நேற்று, ஒருவருக்கு தொற்று உறுதியானது. வால்பாறை தாலுகாவில், நேற்று யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை.ஆனைமலை தாலுகாவில், நேற்று, ஆனைமலை, ஆத்துப்பொள்ளாச்சி, வாழைக்கொம்புநாகூர், மீனாட்சிபுரம், கோட்டூர் பகுதிகளில், எட்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.வருவாய் கோட்டத்தில், நேற்று, 29 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. தொற்று பாதித்தோருடன் தங்கியிருந்தவர்கள் தனிமைபடுத்தப்பட்டனர்.மாணவிகள் மூவருக்கு தொற்றுகிணத்துக்கடவு, கோவில்பாளையம் அருகே, காளியண்ணன்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த, 7ம் தேதி, 24 ஆசிரியர்களுக்கும், 329 மாணவ, மாணவியருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.இதில், காளியண்ணன்புதுாரை சேர்ந்த, 10ம் வகுப்பு மாணவி மற்றும் ஆதியூரைச் சேர்ந்த, பிளஸ் 2 மாணவி, இருவருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.ஆனைமலை பள்ளிகளில் மாதிரிகள் சேகரித்ததில், வி.ஆர்.டி., அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும், ஒடையகுளத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருடன் படித்த மாணவிகள், குடும்பத்தினர் உள்பட, பத்து பேருக்கு தொற்றை கண்டறிய மாதிரி சேகரிக்கப்பட்டது.பள்ளி வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X