அரசியல் செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டை முதல்வருக்கு அனுப்பிய பா.ஜ.,வினர்

Added : செப் 09, 2021 | கருத்துகள் (84)
Share
Advertisement
சென்னை: ''தமிழகத்தில் ஹிந்துக்கள் அதிகம் வசிக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலின், ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் உள்ளார். தி.மு.க., மதச்சார்பு கட்சியாக உள்ளது,'' என, தமிழக பா.ஜ., பொதுச் செயலர் கரு.நாகராஜன் தெரிவித்தார்.தமிழக பா.ஜ., சார்பில், முதல்வர் ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டை அனுப்பும் நிகழ்ச்சி, சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில்
 விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டைமுதல்வருக்கு அனுப்பிய பா.ஜ.,வினர்

சென்னை: ''தமிழகத்தில் ஹிந்துக்கள் அதிகம் வசிக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலின், ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் உள்ளார். தி.மு.க., மதச்சார்பு கட்சியாக உள்ளது,'' என, தமிழக பா.ஜ., பொதுச் செயலர் கரு.நாகராஜன் தெரிவித்தார்.தமிழக பா.ஜ., சார்பில், முதல்வர் ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டை அனுப்பும் நிகழ்ச்சி, சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று நடந்தது.பா.ஜ., துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா, மாநில பொதுச் செயலர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று, தபால் அட்டையில் வாழ்த்து செய்தி எழுதி அனுப்பினர்.கரு.நாகராஜன் கூறியதாவது:


latest tamil news


மாநில தலைவர் அண்ணா மலை அறிவுரைப்படி, முதல்வருக்கு சென்னையில் உள்ள பா.ஜ.,வினர் வாழ்த்து அட்டைகளை அனுப்பினர். தமிழகத்தில் 87 சதவீதம் ஹிந்து மக்கள் வாழ்கின்றனர்.ஆனால் முதல்வர் ஸ்டாலின், ஹிந்து பண்டிகைகளுக்கு ஒரு வாழ்த்து கூட தெரிவிக்காமல் உள்ளார். இது ஒரு மதச்சார்பு அரசாக உள்ளது. தி.மு.க., மதச்சார்பு கட்சியாகஉள்ளது.நாங்கள் வாழ்த்து தெரிவிப்பதன் வாயிலாக, இந்த முறையாவது விநாயகர் சதுர்த்திக்கும், வரக்கூடிய ஹிந்து பண்டிகைகளுக்கும் முதல்வர் வாழ்த்து தெரிவிப்பாரா என்ற ஏக்கத்தோடு, வேதனையோடு வாழ்த்து அட்டைகளை அனுப்புகிறோம்.விநாயகர் சதுர்த்தி என்பது, ஒவ்வொரு பகுதியிலும் 50 - 100 பேர் சேர்ந்து கொண்டாடுகிற ஒரு விழா. லட்சக்கணக்கில் கூடுகிற விழா அல்ல. சென்னையில் மட்டும் 3,000 இடங்களில் விநாயகரை வைத்து வணங்குவர். இந்த விழாவுக்கு தடை விதிப்பது வேதனையானது. குறைந்த இடத்திலாவது, விநாயகரை வைத்து வழிபட அனுமதி தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
09-செப்-202120:21:18 IST Report Abuse
 rajan ஆந்திராவில் ஒரு ஜெகன் என்கிற ஸ்டாலின் irukaru. அங்கேயும் இந்து விரோத ஆட்சி நடக்கிறது. குண்டூரில் சாலை ஒரத்தில் விற்பனைக்கு வைத்து இருந்த விநாயகர் சிலைகளை corporation லாரியில் அள்ளி போட்டுகொண்டு போய் விட்டார்களாம்.
Rate this:
Cancel
09-செப்-202115:54:47 IST Report Abuse
theruvasagan கூப்பிட்டாலும் கூப்பிடாட்டாலும் வாலன்டியரா அங்க போய் கஞ்சி குடிக்கறதும் கேக் சாப்புடறதும்தான் தங்களுக்கு பெருமை கவுரவம்னு நினைக்கிறவங்களை கொழுக்கட்டை சாப்பிட அழைச்சு எதுக்கு நம்ம கவுரவத்தை நாமே கெடுத்துக்கணும் .
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
09-செப்-202115:37:14 IST Report Abuse
sundarsvpr விநாயகரை ஊர்வலமாய் எடுத்து சென்று நீர்நிலையில் கறைக்கமுடியாது. அரசு போக்குவரத்துக்கு ஊர்தியில் எடுத்த செல்ல தடை கிடையாது. அதுபோல் கார் ஆட்டோ இவைகளில் எடுத்து சென்று கரைக்கலாம் மக்களுக்கு எவ்வித இடைஞ்சலும் இல்லை. மறக்காமல் முகக்கவசம் மாட்டிக்கொள்ளுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X