பொது செய்தி

தமிழ்நாடு

காட்சிப்பொருளாக மாறிய தானியங்கி சிக்னல்கள் சந்திப்பு பகுதிகளில் குறையவில்லை நெரிசல்

Added : செப் 09, 2021
Share
Advertisement
உடுமலை : உடுமலையில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை சந்திக்கும் பகுதியில், காட்சிப்பொருளாக உள்ள சிக்னலை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.உடுமலை நகரின் மையப்பகுதியில், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.நெடுஞ்சாலையில், இருந்து மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய ரோடுகள் பிரியும் இடத்தில், போக்குவரத்து நெரிசல் அதிகளவு உள்ளது.குறிப்பாக, தேசிய
 காட்சிப்பொருளாக மாறிய தானியங்கி சிக்னல்கள்   சந்திப்பு பகுதிகளில் குறையவில்லை நெரிசல்

உடுமலை : உடுமலையில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை சந்திக்கும் பகுதியில், காட்சிப்பொருளாக உள்ள சிக்னலை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.உடுமலை நகரின் மையப்பகுதியில், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

நெடுஞ்சாலையில், இருந்து மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய ரோடுகள் பிரியும் இடத்தில், போக்குவரத்து நெரிசல் அதிகளவு உள்ளது.குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பல்லடம், திருப்பூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை பிரியும் இடத்தில், காலை, மாலை நேரத்தில், நெரிசல் அதிகளவு இருப்பது வழக்கம்.அவ்விடத்தில், விபத்துகளை தவிர்க்க, தளி ரோடு சிக்னலில் இருந்து, சந்திப்பு பகுதி வரை, சென்டர்மீடியன் வைக்கப்பட்டது. மேலும், வாகனங்கள் சந்திப்பு பகுதியில், வேகத்தை குறைத்து செல்லும், வகையில், தானியங்கி 'பிளிங்கிரிங்' சிக்னல் வைக்கப்பட்டது.

இதனால், நெடுஞ்சாலையில், வரும் வாகனங்கள் சிக்னலை பார்த்து வேகத்தை குறைக்கும் போது, திருப்பூர், பல்லடம், செஞ்சேரிமலை உட்பட பகுதிகளுக்கு, செல்லும் வாகனங்கள் எளிதாக, தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல எளிதாக இருந்தது.இந்நிலையில், தானியங்கி சிக்னல் முறையாக பராமரிக்கப்படாமல், காட்சிப்பொருளாக மாறியுள்ளது.இதனால், நெரிசலான நேரங்களில், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதே போல், ஏரிப்பாளையம் பகுதியில், மாநில நெடுஞ்சாலையிலிருந்து, செஞ்சேரிமலை ரோடு பிரியும் இடத்தில் அமைக்கப்பட்ட, சிக்னலும் காணாமல் போயுள்ளது.கொழுமம் ரோடு சந்திப்பிலும், இதே நிலையே காணப்படுகிறது. இந்த சிக்னல்களை, சீரமைத்து, விபத்துகளை தவிர்க்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X