தடுப்பூசி போட்டீங்களா? நகராட்சி கணக்கெடுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி போட்டீங்களா? நகராட்சி கணக்கெடுப்பு

Added : செப் 09, 2021
Share
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி குடியிருப்புகளில், வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. நகராட்சி சுகாதார பிரிவு ஊழியர்கள், துாய்மை பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, நகர குடியிருப்பு பகுதிகளில், வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.இதில், குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேர்,

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி குடியிருப்புகளில், வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

நகராட்சி சுகாதார பிரிவு ஊழியர்கள், துாய்மை பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, நகர குடியிருப்பு பகுதிகளில், வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.இதில், குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேர், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், நாள்பட்ட நோய்களான சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, இருதய கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளவர்கள் குறித்து, விபரம் கேட்டு பதிவு செய்யப்படுகிறது.

அத்துடன், வீட்டில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா எனவும் பரிசோதிக்கப்படுகிறது. இந்த கணக்கெடுப்பின் வாயிலாக, தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், கொரோனா தொற்றால் தீவிர பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ளவர்கள், தடுப்பூசி போடாமல் உள்ளவர்கள் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள நகராட்சி திட்டமிட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X