பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு வங்கியில் ரேஷன் ஊழியர் சம்பளம்

Added : செப் 09, 2021
Share
Advertisement
சென்னை:'கூட்டுறவு நிறுவனங்களின் வங்கி கணக்குகள், ரேஷன் கடை ஊழியர்களின் சம்பளம் வழங்க தேவைப்படும் வங்கி கணக்குகளை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மட்டுமே துவக்க வேண்டும்' என, மண்டல இணை பதிவாளர்களை, கூட்டுறவு துறை அறிவுறுத்தி உள்ளது. கூட்டுறவு துறையின் கீழ், கூட்டுறவு வங்கிகள், பல்வேறு கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு பண்டக சாலைகள் உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்கள்

சென்னை:'கூட்டுறவு நிறுவனங்களின் வங்கி கணக்குகள், ரேஷன் கடை ஊழியர்களின் சம்பளம் வழங்க தேவைப்படும் வங்கி கணக்குகளை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மட்டுமே துவக்க வேண்டும்' என, மண்டல இணை பதிவாளர்களை, கூட்டுறவு துறை அறிவுறுத்தி உள்ளது.

கூட்டுறவு துறையின் கீழ், கூட்டுறவு வங்கிகள், பல்வேறு கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு பண்டக சாலைகள் உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்கள் செயல்படுகின்றன.இவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, மத்திய கூட்டுறவு வங்கிகள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக சம்பளம் வழங்க, 2017ல் உத்தரவிடப்பட்டது.

தற்போது, கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் வணிக வங்கிகளுக்கு நிகராக, புதிய தொழில்நுட்பங்களில் பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றன. இதையடுத்து, கூட்டுறவு நிறுவனங்களின் நடப்பு கணக்கு, சேமிப்பு கணக்கு, ஊழியர்களுக்கான சம்பள கணக்குகளையும், மற்ற வங்கிகளில் துவக்குவதை தவிர்த்து, மாவட்ட கூட்டுறவு வங்கிகளின் கிளைகளில் துவக்கி, வரவு, செலவு மேற்கொள்ள, மண்டல இணை பதிவாளர்களை, கூட்டுறவு துறை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X