பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பின் பிடியில் கூடலூர் ஒட்டான் குளம் கண்மாய்; அரைகுறையாய் நடந்த தூர்வாரும் பணி

Added : செப் 09, 2021
Share
Advertisement
கூடலூர் : கூடலூர் ஒட்டான்குளம் கண்மாய் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி நீர்த்தேக்க பரப்பு குறைந்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரும் பணியும் அரைகுறையாக நடந்தது. கரைப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு உடையும் அபாயத்தில் உள்ளது.கூடலூர் ஒட்டான்குளம் கண்மாய் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கண்மாயின் நீர்த்தேக்க பகுதி 62 ஏக்கர் பரப்பளவாகும். ஒன்றரை கிலோ

கூடலூர் : கூடலூர் ஒட்டான்குளம் கண்மாய் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி நீர்த்தேக்க பரப்பு குறைந்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரும் பணியும் அரைகுறையாக நடந்தது. கரைப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு உடையும் அபாயத்தில் உள்ளது.

கூடலூர் ஒட்டான்குளம் கண்மாய் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கண்மாயின் நீர்த்தேக்க பகுதி 62 ஏக்கர் பரப்பளவாகும். ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் உள்ள கரைப் பகுதியில் முதல் மடை, சின்ன மடை என பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் இரண்டு மடைகள் உள்ளன. கண்மாயை நம்பி 500 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன.அரைகுறையாய் நடந்த துார்வாரும் பணிகண்மாயின் கரைப்பகுதி 2017 ல் நீர்வள நிலவளத் திட்டத்தில் ரூ. 47 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு பணி நடந்தது. அந்த நேரத்தில் தூர்வாரும் பணியும் நடந்தது.

ஆனால் முறையான திட்டமிடல் இல்லாததால் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் கரைப்பகுதி பெயரளவில் மண் போட்டு மேவி சரி செய்தனர். இது அடுத்து வந்த மழையிலேயே சேதமடைந்தது நுனிக்கரை அருகே நீர் கசிவு ஏற்பட்டது. மேலும் இரண்டு நீர்திறப்பு மடைகளிலும் மண் அரிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது.ஆக்கிரமிப்பு62 ஏக்கர் பரப்பளவுடைய கண்மாயில் 25 ஏக்கருக்கு மேல் தனியார் சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். அதில் விவசாயம் செய்தும், வீடு கட்டியும் சுற்றுச் சுவர் அமைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனை அகற்றி கண்மாயில் கூடுதல் நீர் தேக்க இதுவரை பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆக்கிரமிப்பு அகற்றினால் மூன்று போகம் சாகுபடி சதீஷ் பாபு, முல்லைப் பெரியாறு பாசனம் மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்க தலைவர்: இக்கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார பல முறை பொதுப்பணித்துறையினருக்கு மனு கொடுத்தோம். சில நாட்களுக்கு முன்பு கண்மாயின் நீர்தேக்க பகுதியில் சர்வே செய்வதற்காக வந்த அதிகாரிகள் எந்த ஒரு பணியையும் செய்யாமல் திரும்பிச் சென்றனர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரும் பணியை செய்து முடித்தால் கண்மாயை நம்பி மூன்று போக நெல் சாகுபடியை செய்ய முடியும்.

கண்மாய் உடையும் அபாயம்கொடியரசன், முல்லைச் சாரல் விவசாய சங்க தலைவர்: கண்மாயின் கரைப்பகுதி பல லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு பணி செய்தும் பல இடங்களில் உடையும் அபாயம் உள்ளதாக அதிகாரிகளுக்கு தெரிவித்தோம். இதை கண்டு கொள்ளாததால் சமீபத்தில் முதல் மடையில் மண் அரிப்பு ஏற்பட்டது. கூடுதல் மழை பெய்து நீர் வரத்து அதிகரிக்கும் போது உடையும் அபாயம் உள்ளது. மேலும் கரை பகுதியில் குப்பை கொட்டுவதால் சுகாதாரக் கேடும் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X