தமிழ்நாடு

செப்., 12ல் ஒரு லட்சம் தடுப்பூசிகள் செலுத்த ஏற்பாடு! கொரோனா பரவலை தடுக்கும் பணி தீவிரம்

Added : செப் 09, 2021
Share
Advertisement
தேனி : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா பரவலை தடுக்கும் வகையில், செப்., 12ல் ‛மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தி ஒரு லட்சம் தடுப்பூசிகள் செலுத்த ஏற்பாடு செய்து வருகின்றனர்.மாவட்டத்தில் 43,244 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 42,633 பேர் குணமடைந்து ‛டிஸ்சார்ஜ்' ஆகினர். 515 பேர் உயிரிழந்த நிலையில் 40 பேர் சிகிச்சையில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் 593 குடியிருப்புப் பகுதிகள்

தேனி : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா பரவலை தடுக்கும் வகையில், செப்., 12ல் ‛மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தி ஒரு லட்சம் தடுப்பூசிகள் செலுத்த ஏற்பாடு செய்து வருகின்றனர்.

மாவட்டத்தில் 43,244 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 42,633 பேர் குணமடைந்து ‛டிஸ்சார்ஜ்' ஆகினர். 515 பேர் உயிரிழந்த நிலையில் 40 பேர் சிகிச்சையில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் 593 குடியிருப்புப் பகுதிகள் தீவிர கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டன. அதில் 580 பகுதிகள் தொற்று பாதிப்பில்லாததாக மாற்றப்பட்டன.

13 குடியிருப்புப் பகுதிகளில் தடுப்புப் பணிகள் நடக்கின்றன. இதில் ஒரு தெருவில் 3 பேர் பாதிப்பும், 13 தெருக்களில் தனியான பாதிப்பும் உள்ளது. வீட்டுத் தனிமை 21, கோவிட் கேர் மையத்தில் 9, மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 10, என 40 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நோய் எதிர்ப்பு வளையம்:மாநில எல்லையை ஒட்டிய 18 கிராமங்களில் செப்., 12ல், யாருக்கெல்லாம் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளதோ அங்கு தடுப்பூசி செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியின் வளையத்தை அப்பகுதியில் 100 சதவீதம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் 336 முகாம்களில் ஒரு லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயித்து பணிகள் துவங்கப்பட்டுள்ளன என, பொது சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X