பொது செய்தி

தமிழ்நாடு

கவிஞர் புலமைப்பித்தன் மறைவு

Added : செப் 09, 2021
Share
Advertisement
சென்னை:கவிஞர் புலமைப்பித்தன், 85, உடல்நலக் குறைவால் காலமானார்.அ.தி.மு.க., முன்னாள் அவைத் தலைவரும், கவிஞருமான புலமைப்பித்தன் வயது முதிர்ச்சி மற்றும் உடல்நலக் குறைவால், சென்னை அடையாறில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார்.அவரது உடல், நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி
 கவிஞர் புலமைப்பித்தன் மறைவு

சென்னை:கவிஞர் புலமைப்பித்தன், 85, உடல்நலக் குறைவால் காலமானார்.

அ.தி.மு.க., முன்னாள் அவைத் தலைவரும், கவிஞருமான புலமைப்பித்தன் வயது முதிர்ச்சி மற்றும் உடல்நலக் குறைவால், சென்னை அடையாறில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார்.அவரது உடல், நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்குகள் இன்று நடக்கின்றன.

கோவை மாவட்டம் பள்ளம்பாளையம் என்ற கிராமத்தில் பிறந்த புலமைப்பித்தன், 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். எம்.ஜி.ஆர்., நடித்த குடியிருந்த கோயில் உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல் எழுதியவர். சமீபத்தில் விஜய் நடித்த தெறி படத்திலும் பாடல் எழுதிஇருந்தார்.அ.தி.மு.க., ஆட்சியில் அரசவைக் கவிஞராக, அ.தி.மு.க., அவைத் தலைவராக, சட்டமேலவை துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.

புலமைப்பித்தனின் மனைவி தமிழரசி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். இருவருமே இறந்து விட்டனர். மகன் வழி பேரன் திலீபன், கவிஞரின் அரவணைப்பில் வளர்ந்தவர். பள்ளிக்கூடம் போகாமலே படத்தில் நாயகனாக நடித்தார். தற்போது சாகாவரம் என்ற படத்தில் நாயகனாக நடித்து, இயக்கி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X