பொது செய்தி

தமிழ்நாடு

கண்மாய் காப்போம்

Added : செப் 09, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் பகுதி பெரிய கண்மாய்களில் தென்காலும் ஒன்று. வைகை அணை நீர் மூலம் இக்கண்மாய் நிரம்பி 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.இக்கண்மாயிலிருந்து அவனியாபுரம் கண்மாய்க்கு தண்ணீர் செல்லும். திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதி குடிநீர் ஆதாரப்பகுதியாக இருப்பது இக்கண்மாய்தான். இக்கண்மாய் பார்ப்பதற்கு ரம்யமாக

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் பகுதி பெரிய கண்மாய்களில் தென்காலும் ஒன்று. வைகை அணை நீர் மூலம் இக்கண்மாய் நிரம்பி 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இக்கண்மாயிலிருந்து அவனியாபுரம் கண்மாய்க்கு தண்ணீர் செல்லும். திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதி குடிநீர் ஆதாரப்பகுதியாக இருப்பது இக்கண்மாய்தான். இக்கண்மாய் பார்ப்பதற்கு ரம்யமாக இருந்தாலும் பெரிய பிரச்னை கழிவுநீர் சங்கமிப்பதுதான்.

காமராஜ், விவசாயி: திருப்பரங்குன்றம், பசுமலை, முனியாண்டிபுரம், பாலாஜிநகர், தேவிநகர், விளாச்சேரி ஒருபகுதி, கூடல்மலைத்தெரு உட்பட பல்வேறு பகுதிகளின் குடியிருப்புகள், வணிக வளாகங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீர் பல்வேறு வழிகளில் இக்கண்மாய்க்குள் செல்கிறது.

கழிவுநீரை பயன்படுத்தி பலர் புற்கள் வளர்த்து விற்கின்றனர். பல ஆண்டுகளாக கழிவுநீர் கலப்பதால் கண்மாய் நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உருவாகி வருகிறது. விவசாயம் இல்லாத காலங்களில் கண்மாயில் மீன் வளர்ப்பவர்களாலும், வாத்து வளர்ப்பவர்களுக்காகவும் தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயம் நடக்கும் சமயத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

கண்மாயை முழுமையாக துார்வாரி கசடுகளை வெளியேற்ற வேண்டும். பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றினால்தான் தென்கால் துாய்மையாகும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X