கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தடை விதித்த உத்தரவில் குறுக்கிட மறுப்பு

Added : செப் 09, 2021
Share
Advertisement
சென்னை: பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், அதை எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தடை விதித்த அரசு உத்தரவில் குறுக்கிட, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமைச் சேர்ந்த கணபதி என்பவர் தாக்கல் செய்த மனு: பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், அவற்றை எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தடை விதித்து, 2021 ஆக., 30ல் அரசு

சென்னை: பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், அதை எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தடை விதித்த அரசு உத்தரவில் குறுக்கிட, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமைச் சேர்ந்த கணபதி என்பவர் தாக்கல் செய்த மனு: பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், அவற்றை எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தடை விதித்து, 2021 ஆக., 30ல் அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த மாக தடை விதித்திருப்பது ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது.

நியாயமற்ற கட்டுப்பாடுகளை விதித்து, நிகழ்ச்சிகளுக்கு தடையாக அரசு இருக்கக் கூடாது. போலீஸ் உதவியுடன் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, சமூக இடைவெளியை பின்பற்றி, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்க, வழிமுறை ஏற்படுத்த வேண்டும்.

எனவே, தமிழக அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பொது இடங்களில் சிலைகள் வைக்கவும், ஊர்வலம் செல்லவும் அனுமதிக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முக சுந்தரம், அரசு பிளீடர் முத்துகுமார் ஆஜராகினர்.

முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், 'வாழ்வுரிமை மிகவும் முக்கியம்; வழிபாட்டு உரிமையை மேற்கொள்ள வேண்டும் என்றால், ஒருவர் வாழ வேண்டும். பொதுநலன் கருதி அரசு, நிபந்தனைகளை விதித்துள்ளது. அரசு உத்தரவில் குறுக்கிட முடியாது' எனக் கூறப்பட்டுள்ளது.வழக்கு விசாரணையை, முதல் பெஞ்ச் முடித்து வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X