பொது செய்தி

தமிழ்நாடு

'கோபாலகிருஷ்ணன் மகன்...' எனத்தொடங்கும் 16ம் நுாற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

Added : செப் 09, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம் : மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கருவேலம்பட்டி - மொச்சிகுளம் ரோட்டில் தனியார் விவசாய நிலத்தில் தனி பாறையில் 500 ஆண்டுகளுக்கு முந்தைய 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு, புடைப்பு சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது.'கருவேலம்பட்டி சூரிய பிரகாஷ் தகவல்படி பெருங்குடி சரஸ்வதி நாராயணன் கல்லுாரி வரலாற்றுத்துறை பேராசிரியரும், பாண்டியநாடு

திருப்பரங்குன்றம் : மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கருவேலம்பட்டி - மொச்சிகுளம் ரோட்டில் தனியார் விவசாய நிலத்தில் தனி பாறையில் 500 ஆண்டுகளுக்கு முந்தைய 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு, புடைப்பு சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது.

'கருவேலம்பட்டி சூரிய பிரகாஷ் தகவல்படி பெருங்குடி சரஸ்வதி நாராயணன் கல்லுாரி வரலாற்றுத்துறை பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர்கள் லட்சுமணன், மூர்த்தி, அஸ்வத்தாமன், சுப்பிரமணியன், ராமகிருஷ்ணன் ஆய்வு செய்தனர்.'பேராசிரியர் முனீஸ்வரன்: பாறையின் ஒரு பகுதியில் 2 அடி அகலம், 4 அடி நீளத்தில் 4 வரிகளில் கிரந்தம் எழுத்துக்களுடன் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

கோபாலகிருஷ்ணன் மகன் என்ற வரியில் தொடங்கி 4வது வரியில் தர்மம் என்ற சொல்லில் நிறைவு பெறுகிறது. தர்மம் என்ற சொல் இருப்பதால் தானம் வழங்கப்பட்டதை அறிய முடிகிறது. இடையில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்கள் மழை, வெயிலால் தேய்மானம் ஏற்பட்டு சிதைந்து விட்டதால் தொடர்ச்சியான பொருளை அறிய முடியவில்லை.கல்வெட்டின் இடதுபுறமுள்ள பாறையில் 2 அடி அகலம், 3 அடி நீளம் கொண்ட புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

நீண்ட காதுகளுடன் கழுத்தில் அணிகலன் அணிந்த ஆணின் சிற்பமும், சரிந்த கொண்டையுடன் நீண்ட காதும், கையில் வளையல் அணிந்து கொண்டு சற்று சாய்ந்த நிலையில் பெண்ணின் சிற்பமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் அப்பகுதியில் வாழ்ந்த தலைவன் தலைவிக்காக உருவாக்கப்பட்டு இருக்கலாம். இச்சிற்பங்களில் அதிக தேய்மானம் ஏற்பட்டுள்ளதால் முகம் தெளிவற்று காணப்படுகிறது.

இக்கல்வெட்டு மற்றும் சிற்பத்தினை தமிழக தொல்லியல் துறையில் பணி ஓய்வுபெற்ற இணை இயக்குநர் சாந்தலிங்கம் உதவியுடன் ஆய்வு செய்த போது கி.பி., 16ம் நுாற்றாண்டை சேர்ந்தவை என அறியப்பட்டது.தற்போது அப்பகுதியினர் சிற்பத்தை நீலன், நீலி என்ற பெயரில் கடவுளாக வழிபட்டு வருகின்றனர் என்றார்.'

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X