அரசியல் செய்தி

தமிழ்நாடு

'டிஜிட்டல் தமிழ்நாடு திட்டம்' மனோ தங்கராஜ் தகவல்

Added : செப் 09, 2021
Share
Advertisement
சென்னை:சட்டசபையில் நேற்று, தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்த பின், அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்ட அறிவிப்புகள்:* மின்னாளுகையை அரசின் அனைத்து மட்டங்களிலும் புகுத்தி, முழுமையான அரசாங்கத்தை எய்திடும் வகையில், 'டிஜிட்டல் தமிழ்நாடு திட்டம்' செயல்படுத்தப்படும். அரசுத் துறைகளின் செயல்பாடுகள் படிப்படியாக மின்மயமாக்கப்படும்*

சென்னை:சட்டசபையில் நேற்று, தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்த பின், அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்ட அறிவிப்புகள்:

* மின்னாளுகையை அரசின் அனைத்து மட்டங்களிலும் புகுத்தி, முழுமையான அரசாங்கத்தை எய்திடும் வகையில், 'டிஜிட்டல் தமிழ்நாடு திட்டம்' செயல்படுத்தப்படும். அரசுத் துறைகளின் செயல்பாடுகள் படிப்படியாக மின்மயமாக்கப்படும்

* தமிழக அரசின் கொள்கை முடிவுகளுக்கான ஆதரவு அமைப்பு ஒன்று செயல்படுத்தப்படும்; தமிழக அரசுத் துறைகளின் அலுவலக செயல்பாடுகளை மின்மயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்
* தரவு மையக் கொள்கை, உலகின் திறன் மையக் கொள்கை வெளியிடப்படும்

* இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், படிப்படியாக அமைக்கப்படும்.இவை உட்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X