போலீஸ் செய்திகள்

Added : செப் 09, 2021
Share
Advertisement
நிழற்குடை 'ஏசி' திருடியவர்கள் கைதுமதுரை: தமுக்கம் பஸ் ஸ்டாப்பில் பயணிகளுக்கான 'ஏசி' அறை உள்ளது. இங்குள்ள இரு 'ஏசி' திருடியதாக மதிச்சியம் சிவா 37, சுப்பிரமணியபுரம் முருகன் 40, மீனாம்பாள்புரம் சவுந்திரபாண்டியன் 46, ஆகியோரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர். சில மாதங்களுக்கு முன் தமுக்கம் கட்டுமான பணியில் சிவா ஈடுபட்டபோது 'ஏசி' திருட திட்டமிட்டார். ஒயின்ஷாப்பில்

நிழற்குடை 'ஏசி' திருடியவர்கள் கைது

மதுரை: தமுக்கம் பஸ் ஸ்டாப்பில் பயணிகளுக்கான 'ஏசி' அறை உள்ளது. இங்குள்ள இரு 'ஏசி' திருடியதாக மதிச்சியம் சிவா 37, சுப்பிரமணியபுரம் முருகன் 40, மீனாம்பாள்புரம் சவுந்திரபாண்டியன் 46, ஆகியோரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர். சில மாதங்களுக்கு முன் தமுக்கம் கட்டுமான பணியில் சிவா ஈடுபட்டபோது 'ஏசி' திருட திட்டமிட்டார். ஒயின்ஷாப்பில் அறிமுகமான மற்ற இருவருடன் சேர்ந்து திருடியபோது பொதுமக்களின் தகவலின் பேரில் போலீசில் சிக்கினர்.

ஆட்டோ டிரைவர் உட்பட 2 பேர் கைது

மதுரை: வில்லாபுரம் மீனாட்சி நகர் செந்தில் 47. டிப்பர் லாரி டிரைவர். நேற்று அதிகாலை தஞ்சாவூரில் இருந்து வந்தவர், மாட்டுத்தாவணியில் இருந்து ஆட்டோவில் வீடு திரும்பினார். மீனாட்சி கல்லுாரி அருகே ஆட்டோ டிரைவரும், அவரது நண்பரும் செந்திலை தாக்கி அலைபேசியை பறித்து தப்பினர். ஆட்டோ எண் உள்ளிட்ட விபரங்களை போலீசில் செந்தில் தெரிவித்தார். ரயில்வே ஸ்டேஷனில் அந்த ஆட்டோவை போலீசார் கண்டுபிடித்தனர். போலீசாரை கண்டதும் ஆட்டோ வேகமாக சென்றது. சேதுபதி பள்ளி அருகே போலீசார் பிடித்து, வழிப்பறியில் ஈடுபட்ட செல்லுார் கீழத்தோப்பு சரவணன் 28, நண்பர் திருப்புவனம் நெல்முடிக்கரை மாரியப்பனை 32, கைது செய்தனர்.

பெட்ரோல் குண்டு வீசிய மூவர் கைது

மேலுார்: சுண்ணாம்பூர் குமார் 42, வீட்டில் செப்.,6ல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக மதுரை திருநகர் நந்தகுமார் 23, அசாருதீன் 24, வலையபட்டி அசாருதீன் 23, கைது செய்யப்பட்டனர். வாங்கிய பணத்தை கொடுக்காமல் கொடுத்துவிட்டதாக குமார் கூறியதால் குண்டு வீசியது தெரிந்தது. மேலும் மூவரை போலீசார் தேடுகின்றனர்.

டிப்பர் லாரிகள் பறிமுதல்

கொட்டாம்பட்டி: சொக்கலிங்கபுரம் பகுதிகளில் எஸ்.பி., தனிப்படை போலீசார் அனுமதியின்றி மணல், கிராவல் மண் ஏற்றி வந்த இரு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர் மணல்மேட்டுப்பட்டி டிரைவர் சக்திவேலை 45, கைது செய்தனர். மற்றொரு டிரைவரை தேடி வருகின்றனர்.

லாரி மோதி முதியவர் பலி

கூடக்கோவில்: சிவகங்கை மாவட்டம் கவுல்அழகாபுரி கருப்பன் 65. தம்பி மகன் திருமணத்திற்கு எலியார்பத்தி வந்தார். நேற்று காலை டீ குடிக்க நான்குவழிச்சாலையில் சென்ற போது கண்டெய்னர் லாரி மோதி இறந்தார். நிற்காமல் சென்ற லாரி டோல்கேட் மீது மோதி சேதப்படுத்தியது. கருப்பனின் உறவினர்கள் டூவீலரில் விரட்டிச் சென்று லாரியை ஓட்டி வந்த துாத்துக்குடி ராஜ் என்பவரை பிடித்து கூடக்கோவில் போலீசில் ஒப்படைத்தனர்.

மதுக்கடையில் கொள்ளை முயற்சி

திருமங்கலம்: திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் எதிரில் அரசு மதுக்கடை உள்ளது. பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. போலீசாருடன் ஊழியர்கள் முன்பக்க கதவை திறக்க முயன்ற போது முடியாததால், பின்பக்க வழியாக சென்று பார்த்தபோதுமுன்பக்க கதவை கொள்ளையர்கள் உள்ளிருந்தபடி கட்டி வைத்திருந்தது தெரிந்தது. மேலும் நேற்று முன்தினம் வசூலான ரூ. 1.20 லட்சத்தை ஊழியர்கள் பாட்டில்களுக்கு மத்தியில் வைத்திருந்ததால் அந்த பணம் தப்பியது. கொள்ளை முயற்சி குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தாயை கொன்ற மகன் கைது

எழுமலை கோடாங்கிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ் 40. கிராமத்தில் குடி தண்ணீர் திறந்து விடும் பணி செய்கிறார். இவரது தாய் பெருமாயியிடம் 69, மது குடிக்க பணம் கேட்டு நேற்று மாலை 4:45 மணியளவில் தகராறு செய்து மார்பிலும், தொண்டையிலும் காலால் மிதித்துள்ளார். இதில் மூச்சுத்திணறி பெருமாயி உயிரிழந்தார். எழுமலை இன்ஸ்பெக்டர் காஞ்சனாதேவி மற்றும் போலீசார் ரமேஷை கைது செய்தனர்.

புகையிலை பறிமுதல்: ஒருவர் கைது

எம். கல்லுப்பட்டி: எஸ்.ஐ., ஜெயகஜேந்திரன் தலைமையில் போலீசார் டி.கிருஷ்ணாபுரத்தில் நடத்திய சோதனையில் செல்வம் 45, என்பவர் வீட்டில் பதுக்கி இருந்த 5 மூடை புகையிலை, குட்கா பொருட்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X