இந்தியா

தேஜஸ்வி - சிராக் திடீர் சந்திப்பு

Updated : செப் 09, 2021 | Added : செப் 09, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
பாட்னா, :பீஹார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவை, லோக் ஜன சக்தி எம்.பி., சிராக் பாஸ்வான் நேற்று சந்தித்தார். இது, பீஹார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, லோக் ஜன சக்தி கட்சியின் தலைவராகவும், மத்திய
 தேஜஸ்வி - சிராக் திடீர் சந்திப்பு


பாட்னா, :பீஹார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவை, லோக் ஜன சக்தி எம்.பி., சிராக் பாஸ்வான் நேற்று சந்தித்தார். இது, பீஹார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, லோக் ஜன சக்தி கட்சியின் தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த ராம் விலாஸ் பாஸ்வான், கடந்த ஆண்டு செப்., 8ல் இறந்தார்.


latest tamil news




நினைவு நாள்



ராம்விலாஸ் பாஸ்வான் இறந்து ஓராண்டு முடிந்த நிலையில், அவரது நினைவு நாள் வரும் 12ம் தேதி, பீஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள பாஸ்வானின் இல்லத்தில் நடக்கிறது.இதில் பங்கேற்க, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களுக்கு, பாஸ்வானின் மகனும், லோக் ஜன சக்தி கட்சியின் எம்.பி.,யுமான சிராக் பாஸ்வான் அழைப்பு விடுத்து வருகிறார்.இந்நிலையில், பாட்னாவில் நேற்று பீஹார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவை, சிராக் பஸ்வான் நேற்று சந்தித்து, தன் தந்தையின் நினைவு தினத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

கருத்து வேறுபாடுகள்
இது பற்றி தேஜஸ்வி கூறுகையில், ''என்னை சிராக் சந்தித்ததில் அரசியல் எதுவும் இல்லை. என் தந்தைக்கும், சிராக்கின் தந்தைக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நெருங்கிய நண்பர்களாகவே இருந்தனர். குடும்ப நண்பர் என்ற முறையில் தான், தன் தந்தையின் நினைவு நாளில் பங்கேற்க, சிராக் அழைப்பு விடுத்தார்,'' என்றார்.சிராக் பாஸ்வான் கூறுகையில், ''என் தந்தையின் முதல் நினைவு நாளில் பங்கேற்க, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுத்துள்ளேன். ''பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்தும் அழைப்பு விடுக்க உள்ளேன். லாலு பிரசாத் யாதவையும் சந்திக்க திட்டமிட்டுள்ளேன்,''என்றார்.ராம்விலாஸ் பாஸ்வானின் மறைவுக்கு பின், உட்கட்சி பூசலால் லோக் ஜன சக்தி கட்சியில் பிளவு ஏற்பட்டது. கட்சிக்கு நானே தலைவர் என சிராக்கின் சித்தப்பா பசுபதி குமார் பரஸ் அறிவித்தார். அவருக்கு மத்திய அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. கட்சியில் ஓரங்கட்டப்பட்டுள்ள சிராக், தனிக்கட்சி துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாகவே, தேஜஸ்வியை அவர் சந்தித்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், பீஹார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
09-செப்-202109:20:36 IST Report Abuse
A.George Alphonse இதெல்லாம் ஒரு செய்தி.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
09-செப்-202109:01:46 IST Report Abuse
duruvasar பரபரப்புக்கெல்லாம் ஒன்றும் கிடையாது. வீட்டிலேயே சந்திக்க வேண்டும் என்பதில்லையே, மலைபங்களாவில் சந்திக்கலாம். அவர்கள் நம்ம ஊர் வெறும் அரசியல்வியாதிகள் தானே தவிர வேற்று கிரஹவாசிகள் அல்லவே.
Rate this:
Cancel
09-செப்-202108:47:27 IST Report Abuse
kulandai kannan சிராக்கும் அவரது அப்பாவைப் போல்தான். சந்தர்பவாதி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X