பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் நிபா வைரஸ்; டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு

Added : செப் 09, 2021
Share
Advertisement
மதுரை : கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் உட்பட எந்த நோயாக இருந்தாலும் உடனடி சிகிச்சை பெற மதுரை அரசு மருத்துவமனையில் தனிவார்டு தயார் நிலையில் உள்ளது.புறநோயாளிகள் வார்டில் முதல் மாடியில் 70 ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள், 20 ஐ.சி.யு., படுக்கைகள் தயாராக உள்ளன. வார்டு முழுவதும் மத்திய தொகுப்பில் இருந்து ஆக்சிஜன் செல்லும் வகையில்
 அரசு மருத்துவமனையில் நிபா வைரஸ்; டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு

மதுரை : கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் உட்பட எந்த நோயாக இருந்தாலும் உடனடி சிகிச்சை பெற மதுரை அரசு மருத்துவமனையில் தனிவார்டு தயார் நிலையில் உள்ளது.

புறநோயாளிகள் வார்டில் முதல் மாடியில் 70 ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள், 20 ஐ.சி.யு., படுக்கைகள் தயாராக உள்ளன. வார்டு முழுவதும் மத்திய தொகுப்பில் இருந்து ஆக்சிஜன் செல்லும் வகையில் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு படுக்கையிலும் ஆக்சிஜன், மானிட்டர் வசதி உள்ளது. இந்த வார்டில் மட்டும் 3 இ.சி.ஜி., கருவிகள் மற்றும் வென்டிலேட்டர்கள் அனைத்தும் உள்ளன.

சிறப்பு வார்டு குறித்து மருத்துவத் துறைத் தலைவர் நடராஜன் கூறியதாவது:நிபா வைரஸ், டெங்கு வைரஸ் காய்ச்சலுக்கு என்று தனியாக நோய் அறிகுறி இல்லை. எல்லா வகை வைரஸ் காய்ச்சலுக்குமே கண் எரிச்சல், தலைவலி, உடல்வலி, வயிற்றுப் போக்கு என எல்லா அறிகுறிகளும் காணப்படும். காய்ச்சல் என்று வந்தாலே அந்த நோயாளிகளை சிறப்பு வார்டில் சேர்த்து அவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்புவோம்.சென்னை கிண்டி அல்லது புனே தேசிய ஆய்வகத்தில் பரிசோதனை மாதிரிகளின் முடிவுகள் பெறப்படும்.

2, 3 நாட்களில் முடிவு வந்த பின் அதற்கேற்ப நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்போம். தற்போது வரை சிறப்பு வார்டில் எந்த நோயாளிகளும் சேர்க்கப்படவில்லை என்றார்.மருத்துவமனையில் திருட்டுஅரசு சிறப்பு மருத்துவமனையில் 2020 மார்ச் முதல் இந்தாண்டு செப்., 7 வரையிலான காலக்கட்டத்தில் ரூ.7.47 லட்சம் மதிப்புள்ள 3 மல்டி பாரா மானிட்டர்கள், கம்ப்யூட்டர், சிரஞ்ச் பம்ப் போன்றவை திருடப்பட்டுள்ளன. டீன் ரத்தினவேலு புகாரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X