கோயில் நிலத்தில் சாலை மாஜி நீதிபதி வழக்கால் தீர்வு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோயில் நிலத்தில் சாலை மாஜி நீதிபதி வழக்கால் தீர்வு

Added : செப் 09, 2021
Share
மதுரை:சிவகங்கை மாவட்டம் பூலாங் குறிச்சி கோயில் நிலத்தில் அனுமதியின்றி அமைத்த சாலையை அகற்ற முன்னாள் நீதிபதி ஏ.செல்வம் தாக்கல் செய்த வழக்கு அடிப்படையில் அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.செல்வம் தாக்கல் செய்த மனு: சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் அருகே எனது சொந்த ஊர் பூலாங்குறிச்சியில் வசிக்கி றேன். அங்கு

மதுரை:சிவகங்கை மாவட்டம் பூலாங் குறிச்சி கோயில் நிலத்தில் அனுமதியின்றி அமைத்த சாலையை அகற்ற முன்னாள் நீதிபதி ஏ.செல்வம் தாக்கல் செய்த வழக்கு அடிப்படையில் அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.செல்வம் தாக்கல் செய்த மனு: சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் அருகே எனது சொந்த ஊர் பூலாங்குறிச்சியில் வசிக்கி றேன். அங்கு உருமன் சுவாமி கோயில் உள்ளது. எனது முன்னோர்கள் பூஜாரிகளாக இருந்தனர். இது அறநிலையத்துறையின் கீழ் உள்ளது. கோயில் பாரம்பரிய பழக்க வழக்கப்படி அங்கு காலணி அணிந்து செல்ல தடை உள்ளது.

வணிக நடவடிக்கையில் ஈடுபடுபடக்கூடாது; கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் சாலை அமைக்க அனுமதி இல்லை. சாலை அமைக்கப்பட்டுள்ளது.இதனால் கோயிலின் புனிதத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படும். சாலை அமைக்க அறநிலையத்துறையின் அனுமதியை திருப்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்), பூலாங்குறிச்சி ஊராட்சி தலைவர் பெறவில்லை. இது சட்டவிரோதம்.

நாச்சியார்புரம் அறநிலையத்துறை ஆய்வாளரிடம் புகார் செய்தேன். சாலையை அகற்ற உத்தரவிட்டார். அதை நிறைவேற்ற நடவடிக்கை இல்லை. சிவகங்கை கலெக்டரிடம் புகார் செய்தேன்.சாலையை அகற்ற அறநிலையத்துறை ஆய்வாளர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு ஏ.செல்வம் குறிப்பிட்டார்.

நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி: சாலையை 30 நாட்களில் அகற்ற திருப்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர், பூலாங்குறிச்சி ஊராட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X