கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்கள் இடமாறுதல்: விசாரணை கோரி வழக்கு

Added : செப் 09, 2021
Share
Advertisement
மதுரை:மதுரை முனிச்சாலை ரமேஷ் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 2020-21 ல் பல ஆசிரியர்கள் இடமாறுதல் செய்யப் பட்டனர். இதற்கு பள்ளிக் கல்வித்துறையில் பெரிய அளவில் லஞ்சம் பெறப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் இடமாறுதலுக்கு கலந்தாய்வு நடத்தவில்லை. உண்மையான காரணம் அடிப்படையில் விரும்பும் இடங்களுக்கு மாறுதலை

மதுரை:மதுரை முனிச்சாலை ரமேஷ் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 2020-21 ல் பல ஆசிரியர்கள் இடமாறுதல் செய்யப் பட்டனர். இதற்கு பள்ளிக் கல்வித்துறையில் பெரிய அளவில் லஞ்சம் பெறப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் இடமாறுதலுக்கு கலந்தாய்வு நடத்தவில்லை. உண்மையான காரணம் அடிப்படையில் விரும்பும் இடங்களுக்கு மாறுதலை எதிர்பார்த்த ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விதிமீறல் நடந்துள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எம்.துரை சுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு தமிழக உள்துறை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி அக்.,27க்கு ஒத்திவைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X