அரசியல் செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டை தமிழக முதல்வருக்கு அனுப்பிய பா.ஜ.,வினர்

Added : செப் 09, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை:''தமிழகத்தில் ஹிந்துக்கள் அதிகம் வசிக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலின், ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் உள்ளார். தி.மு.க., மதச்சார்பு கட்சியாக உள்ளது,'' என, தமிழக பா.ஜ., பொதுச் செயலர் கரு.நாகராஜன் தெரிவித்தார்.தமிழக பா.ஜ., சார்பில், முதல்வர் ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டை அனுப்பும் நிகழ்ச்சி, சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில்
 விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டை தமிழக முதல்வருக்கு அனுப்பிய பா.ஜ.,வினர்

சென்னை:''தமிழகத்தில் ஹிந்துக்கள் அதிகம் வசிக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலின், ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் உள்ளார். தி.மு.க., மதச்சார்பு கட்சியாக உள்ளது,'' என, தமிழக பா.ஜ., பொதுச் செயலர் கரு.நாகராஜன் தெரிவித்தார்.

தமிழக பா.ஜ., சார்பில், முதல்வர் ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டை அனுப்பும் நிகழ்ச்சி, சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று நடந்தது. பா.ஜ., துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா, மாநில பொதுச் செயலர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று, தபால் அட்டையில் வாழ்த்து செய்தி எழுதி அனுப்பினர்.

கரு.நாகராஜன் கூறியதாவது:மாநில தலைவர் அண்ணாமலை அறிவுரைப்படி, முதல்வருக்கு சென்னையில் உள்ள பா.ஜ.,வினர் வாழ்த்து அட்டைகளை அனுப்பினர். தமிழகத்தில் 87 சதவீதம் ஹிந்து மக்கள் வாழ்கின்றனர். ஆனால் முதல்வர் ஸ்டாலின், ஹிந்து பண்டிகைகளுக்கு ஒரு வாழ்த்து கூட தெரிவிக்காமல் உள்ளார்.

இது ஒரு மதச்சார்பு அரசாக உள்ளது. தி.மு.க., மதச்சார்பு கட்சியாக உள்ளது.நாங்கள் வாழ்த்து தெரிவிப்பதன் வாயிலாக, இந்த முறையாவது விநாயகர் சதுர்த்திக்கும், வரக்கூடிய ஹிந்து பண்டிகைகளுக்கும் முதல்வர் வாழ்த்து தெரிவிப்பாரா என்ற ஏக்கத்தோடு, வேதனையோடு வாழ்த்து அட்டைகளை அனுப்புகிறோம்.

விநாயகர் சதுர்த்தி என்பது, ஒவ்வொரு பகுதியிலும் 50 - 100 பேர் சேர்ந்து கொண்டாடுகிற ஒரு விழா. லட்சக்கணக்கில் கூடுகிற விழா அல்ல. சென்னையில் மட்டும் 3,000 இடங்களில் விநாயகரை வைத்து வணங்குவர். இந்த விழாவுக்கு தடை விதிப்பது வேதனையானது. குறைந்த இடத்திலாவது, விநாயகரை வைத்து வழிபட அனுமதி தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu - tiruchi,இந்தியா
10-செப்-202101:25:05 IST Report Abuse
babu இந்து அறநிலயதுறை சர்ச் அறநிலய துறை மசுதி அறநிலய துறை ஓரவஞ்சனை யாருக்கு? இந்துக்களை வஞ்சகபடுத்தி நொந்து நோக அடிப்பது எது.
Rate this:
Cancel
babu - tiruchi,இந்தியா
10-செப்-202101:19:51 IST Report Abuse
babu சமபந்தி விருந்து நடந்தால் வரும் இந்த கடவுள் எதிர்ப்பு RSS எதிர்ப்பு அறி வாளிகள். சமஸ்கிருதம் எதிர் பார் கள் உருது பிரச்சினை இல்லை. ஆங் கிலம்சம்மதம். ???
Rate this:
Cancel
venkates - ngr,இந்தியா
10-செப்-202100:12:05 IST Report Abuse
venkates தமிழனுக்கு வாழ்த்து கிடையாது ? தமிழன் ஏமாளி? அந்நிய மதங்களுக்கு உண்டு ,,, உள்நாட்டு மதத்துக்கு கிடையாது ,,, அதை அழிக்க உண்டு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X