பொது செய்தி

தமிழ்நாடு

ஒலிம்பிக் வீராங்கனை ரேவதிக்கு பதவி உயர்வு

Added : செப் 09, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை:ஒலிம்பிக் வீராங்கனை மதுரை சக்கிமங்கலம் ரேவதிக்கு ஊழியர் நல ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கி ரயில்வே நிர்வாகம் கவுரவித்து உள்ளது.விளையாட்டு, சாரண, சாரணியர், கலைத்துறையில் முன்னணியில் உள்ளவர்களை ஊக்குவிக்க ரயில்வேயில் நிரந்தர பணி வழங்கப்படுகிறது. விளையாட்டில் தடகள போட்டிகளில் சாதனை புரிந்த ரேவதி மதுரை ரயில்வே கோட்டத்தில் கமர்ஷியல் கிளார்க் பணி வழங்கப்பட்டு
 ஒலிம்பிக் வீராங்கனை  ரேவதிக்கு பதவி உயர்வு

மதுரை:ஒலிம்பிக் வீராங்கனை மதுரை சக்கிமங்கலம் ரேவதிக்கு ஊழியர் நல ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கி ரயில்வே நிர்வாகம் கவுரவித்து உள்ளது.

விளையாட்டு, சாரண, சாரணியர், கலைத்துறையில் முன்னணியில் உள்ளவர்களை ஊக்குவிக்க ரயில்வேயில் நிரந்தர பணி வழங்கப்படுகிறது. விளையாட்டில் தடகள போட்டிகளில் சாதனை புரிந்த ரேவதி மதுரை ரயில்வே கோட்டத்தில் கமர்ஷியல் கிளார்க் பணி வழங்கப்பட்டு பணிபுரிந்து வந்தார்.

சமீபத்தில் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் தடகள போட்டியில் பங்கேற்றார். அவரை கவுரவிக்கும் வகையில் அவருக்கு ஊழியர் நல ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. மேலும் ஏழாவது மத்திய சம்பளக்குழு பரிந்துரைத்த சம்பள விகிதம் மூன்றாம் நிலையிலிருந்து ஆறாம் நிலைக்கு உயர்வு வழங்கப்பட்டது.

தற்போது அவருக்கு வழங்கப்பட்ட பணி அவர் விளையாட்டுத்துறையில் பயிற்சிகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ரேவதியை கோட்ட ரயில்வே மேலாளர் பி.அனந்த், ஊழியர் நல அலுவலர் சுகாதாரன் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
15-செப்-202106:18:30 IST Report Abuse
NicoleThomson வாழ்த்துக்கள் பெண்ணே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X