சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆமைகள் கடத்த முயற்சி விசாரணைக்கு பரிந்துரை

Added : செப் 09, 2021
Share
Advertisement
சென்னை:சென்னையில் இருந்து தாய்லாந்திற்கு, நட்சத்திர ஆமைகள் கடத்த முயன்றது தொடர்பான வழக்கை, வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு சுங்கத் துறை பரிந்துரை செய்துள்ளது.சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் செல்லும் சரக்கு விமானம், ஆக., 17ல் தயாராக இருந்தது. விமானத்தில் ஏற்றுவதற்காக, கடல் நண்டுகள் என குறிப்பிடப்பட்டு 15

சென்னை:சென்னையில் இருந்து தாய்லாந்திற்கு, நட்சத்திர ஆமைகள் கடத்த முயன்றது தொடர்பான வழக்கை, வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு சுங்கத் துறை பரிந்துரை செய்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் செல்லும் சரக்கு விமானம், ஆக., 17ல் தயாராக இருந்தது. விமானத்தில் ஏற்றுவதற்காக, கடல் நண்டுகள் என குறிப்பிடப்பட்டு 15 பெட்டிகள் வந்திருந்தன. சந்தேகமடைந்த அதிகாரிகள், 'பார்சல்'களை சோதனை செய்தனர். அவற்றில் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2,247 நட்சத்திர ஆமைகள் உயிருடன் இருந்தன.

இந்த வழக்கில், சுங்கத் துறை அதிகாரிகள், ஒருவரை கைது செய்தனர். சுங்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் இருந்து தாய்லாந்திற்கு 2,247 இந்திய நட்சத்திர ஆமைகளை கடத்த முயற்சி நடந்தது. அவற்றை பறிமுதல் செய்து தமிழக வனத் துறையிடம் ஒப்படைத்தனர்.

வேலுார் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 'நட்சத்திர ஆமைகள் எனத் தெரிந்து தான் அனுப்பினேன்' என, விசாரணையில் ஒப்புக் கொண்டார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X