கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பிராந்திய மொழிகளில் தேர்வு: அரசுக்கு உத்தரவு

Added : செப் 09, 2021
Share
Advertisement
சென்னை:பிராந்திய மொழிகளில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வுகளை நடத்தக் கோரிய மனுவை, எட்டு வாரங்களில் பரிசீலிக்கும்படி, மத்திய உள்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசு பணிகளுக்கான தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வுகள், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே நடப்பதாகவும், இதனால், ஹிந்தி

சென்னை:பிராந்திய மொழிகளில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வுகளை நடத்தக் கோரிய மனுவை, எட்டு வாரங்களில் பரிசீலிக்கும்படி, மத்திய உள்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசு பணிகளுக்கான தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வுகள், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே நடப்பதாகவும், இதனால், ஹிந்தி பேசாதோர் பாதிக்கப்படுவதாகவும், பிராந்திய மொழிகளிலும் தேர்வுகள் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.மத்திய அரசு சார்பில், வழக்கறிஞர் சந்திரசேக ரன் ஆஜராகி, ''மனுதாரர் கோரும் நிவாரணம், அலுவல் மொழி சட்டத்துக்கு முரணானது,'' என்றார். இதையடுத்து, விரிவான மனுவை நான்கு வாரங்களில் மத்திய அரசுக்கு அனுப்பவும், அதை எட்டு வாரங்களில் பரிசீலித்து, உத்தரவு பிறப்பிக்கும்படியும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X