அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: ஆடத் தெரியாத ஆட்டக்காரி!

Updated : செப் 09, 2021 | Added : செப் 09, 2021 | கருத்துகள் (124)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:ஆர்.சுப்ரமணியம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் 19 எதிர்க்கட்சிகள் சமீபத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக ஆலோசனை நடத்தின. அதில் சமையல் காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைப்பது உள்ளிட்ட, 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 20 முதல்--
DMK, Congress, CM Stalin, Sonia, Stalin, MK Stalin, Sonia Gandhi


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


ஆர்.சுப்ரமணியம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் 19 எதிர்க்கட்சிகள் சமீபத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக ஆலோசனை நடத்தின. அதில் சமையல் காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைப்பது உள்ளிட்ட, 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 20 முதல்-- 30ம் தேதி வரை, நாடு முழுதும் போராட்டங்களை நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனவாம்.

அதன்படி, மத்திய அரசைக் கண்டித்து வரும் 20-ம் தேதி வீடுகள் முன் கறுப்பு கொடியேந்தி போராட்டம் நடத்தப்படும் என, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. அதாவது அக்கட்சிகள், நாட்டை ஆள, நிர்வகிக்க, நம் பிரதமர் மோடிக்கு தெரியவில்லை என குற்றஞ்சாட்டி போராட்டம் நடத்த உள்ளன. மக்கள் பிரச்னைகளை தீர்த்து வைப்போம் என வாக்குறுதி அளித்து தானே, தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியை கைப்பற்றியது.


latest tamil news



இப்போது மத்திய அரசை குறை கூறுவதால், தி.மு.க.,விற்கு ஆள தெரியவில்லை என்று தானே அர்த்தம்? பிரதமர் மோடி வலிமையாக ஆட்சி நடத்தி வருவதால், அதை சகித்து கொள்ள இயலாத காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த முகூர்த்தம் குறித்துள்ளன.

'ஆடத் தெரியாத ஆட்டக்காரி, கூடம் கோணல் என்றாளாம்' என்று ஒரு சொலவடை உண்டு.அது போல, ஆள தெரியாத தி.மு.க., தன் இயலாமையை மறைக்க, மத்திய அரசு மீது பழியை போட்டு, போராட்டம் எனும் வேடிக்கை காட்டி தப்பிக்க முயற்சி செய்கிறது. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு; தி.மு.க., அரசின் சாயம் வெளுத்தது 100 நாட்களில்!

Advertisement




வாசகர் கருத்து (124)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
15-செப்-202119:02:04 IST Report Abuse
Tamilnesan பாவம் சோனியா அம்மா யாரவது ஒரு வார்டு மெம்பெர் பதவி தங்களேன் அம்மணிக்கு
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
15-செப்-202118:59:43 IST Report Abuse
Tamilnesan மகா ஜனங்களே.....நம்ம நாட்டில் காங்கிரஸ் கட்சி என்று தற்போது உள்ளதா? காணாம போனவங்க லிஸ்டில் அந்த கட்சி சேர்ந்து பல வருடங்கள் ஓடி விட்டதே
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-செப்-202122:45:34 IST Report Abuse
முக்கண் மைந்தன் இந்தெ சுப்புணி சொல்ற வலிமையான அரசு ஏழு வருசத்துல மூனு கேரளா சைசுக்கு நம்ம நெலத்த சைனாவ ஆக்ரமிக்கெ வெச்சிருக்கு,
Rate this:
binakam - chennai,இந்தியா
10-செப்-202114:55:36 IST Report Abuse
binakamஆக்கிரமிக்கும் சமயம் பக்கத்திலிருந்து பார்த்தமாதிரி புளுக கூடாது....
Rate this:
RAVINDRAN - CHENNAI,இந்தியா
10-செப்-202115:15:22 IST Report Abuse
RAVINDRANஒட்டக moolayoda திரியும் மூக்கன் மைந்தன் என்ற மோர்கனுக்கு கேனத்தனமான கருது போடுவது thavira தவிர வேறு எதுவும் தெரியாது.ஒரு சர்க்கஸ் கொம்பனியில் கோமாளி ஆகா சேர்ந்தாள் நல்ல பிழைக்கலாம்....
Rate this:
பாலா - chennai,இந்தியா
13-செப்-202107:18:34 IST Report Abuse
பாலாஎன்ன பொசுக்குன்னு இப்படி பேசிபுட்டீரு நாங்க அங்கன இத்த வேலதான் பாக்கோம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X