இது உங்கள் இடம்: ஆடத் தெரியாத ஆட்டக்காரி!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: ஆடத் தெரியாத ஆட்டக்காரி!

Updated : செப் 09, 2021 | Added : செப் 09, 2021 | கருத்துகள் (124)
Share
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:ஆர்.சுப்ரமணியம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் 19 எதிர்க்கட்சிகள் சமீபத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக ஆலோசனை நடத்தின. அதில் சமையல் காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைப்பது உள்ளிட்ட, 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 20 முதல்--
DMK, Congress, CM Stalin, Sonia, Stalin, MK Stalin, Sonia Gandhi


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


ஆர்.சுப்ரமணியம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் 19 எதிர்க்கட்சிகள் சமீபத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக ஆலோசனை நடத்தின. அதில் சமையல் காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைப்பது உள்ளிட்ட, 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 20 முதல்-- 30ம் தேதி வரை, நாடு முழுதும் போராட்டங்களை நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனவாம்.

அதன்படி, மத்திய அரசைக் கண்டித்து வரும் 20-ம் தேதி வீடுகள் முன் கறுப்பு கொடியேந்தி போராட்டம் நடத்தப்படும் என, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. அதாவது அக்கட்சிகள், நாட்டை ஆள, நிர்வகிக்க, நம் பிரதமர் மோடிக்கு தெரியவில்லை என குற்றஞ்சாட்டி போராட்டம் நடத்த உள்ளன. மக்கள் பிரச்னைகளை தீர்த்து வைப்போம் என வாக்குறுதி அளித்து தானே, தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியை கைப்பற்றியது.


latest tamil news



இப்போது மத்திய அரசை குறை கூறுவதால், தி.மு.க.,விற்கு ஆள தெரியவில்லை என்று தானே அர்த்தம்? பிரதமர் மோடி வலிமையாக ஆட்சி நடத்தி வருவதால், அதை சகித்து கொள்ள இயலாத காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த முகூர்த்தம் குறித்துள்ளன.

'ஆடத் தெரியாத ஆட்டக்காரி, கூடம் கோணல் என்றாளாம்' என்று ஒரு சொலவடை உண்டு.அது போல, ஆள தெரியாத தி.மு.க., தன் இயலாமையை மறைக்க, மத்திய அரசு மீது பழியை போட்டு, போராட்டம் எனும் வேடிக்கை காட்டி தப்பிக்க முயற்சி செய்கிறது. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு; தி.மு.க., அரசின் சாயம் வெளுத்தது 100 நாட்களில்!

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X