பொது செய்தி

தமிழ்நாடு

'வீடுகளில் வழிபடும் விநாயகர் சிலைகளை கரைக்க தடையில்லை'

Added : செப் 09, 2021
Share
Advertisement
சென்னை:'வீடுகளில் வழிபடும் விநாயகர் சிலைகளை, தனி நபர்கள் நீர் நிலைகளில் கரைக்க தடை ஏதும் இல்லை' என, சென்னை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஹிந்து அமைப்பினர் மற்றும் பொது மக்கள், விநாயகர் சிலைகளை பொது இடங்களில் நிறுவி, வழிபாடு செய்த பின், ஊர்வலமாக எடுத்துச் சென்று, நீர்நிலைகளில்

சென்னை:'வீடுகளில் வழிபடும் விநாயகர் சிலைகளை, தனி நபர்கள் நீர் நிலைகளில் கரைக்க தடை ஏதும் இல்லை' என, சென்னை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஹிந்து அமைப்பினர் மற்றும் பொது மக்கள், விநாயகர் சிலைகளை பொது இடங்களில் நிறுவி, வழிபாடு செய்த பின், ஊர்வலமாக எடுத்துச் சென்று, நீர்நிலைகளில் கரைப்பர்.கொரோனா பரவல் காரணமாக, அதற்கு இந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, 27க்கும் மேற்பட்ட ஹிந்து அமைப்பு நிர்வாகிகள், 200 பேருடன், சென்னை வேப்பேரியில் உள்ள, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள்ஆலோசனை நடத்தினர்.

பின், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, விநாயகர் சதுர்த்தி யையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுதல் மற்றும் பொது இடங்களில் விழா கொண்டாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.அதேபோல, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும், கூட்டமாக சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

தனி நபர்கள், தங்கள் வீடுகளில் வழிபடும் விநாயகர் சிலைகளை தனி நபர்களாக சென்று அருகில் உள்ள, நீர் நிலைகளில் கரைப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இது அமைப்புகளுக்கு பொருந்தாது.

சென்னையில், நேப்பியர் பாலத்தில் இருந்து, சாந்தோம் வரை உள்ள, கடலில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு அனுமதி இல்லை.வீடுகளில் வழிபடும் விநாயகர் சிலைகளை அருகில் உள்ள, கோவில்களில் வைக்கலாம். அச்சிலைகளை ஹிந்து அறநிலையத்துறை சார்பில் நீர் நிலைகளில் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X