பொது செய்தி

தமிழ்நாடு

'வீடு, கோவில் முன் சிலை வைத்து வழிபடக்கூடாதா?'

Added : செப் 09, 2021
Share
Advertisement
திருப்பூர் : விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனை கூட்டம், திருப்பூர் கலெக் டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். வருவாய்த்துறை, போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்துக்கு, தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்தும், பொது அமைப்பினர் வழிபாட்டுக்கு விதிக்கப்பட் டுள்ள கட்டுப்பாடு

திருப்பூர் : விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனை கூட்டம், திருப்பூர் கலெக் டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். வருவாய்த்துறை, போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்துக்கு, தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்தும், பொது அமைப்பினர் வழிபாட்டுக்கு விதிக்கப்பட் டுள்ள கட்டுப்பாடு குறித்தும் விளக்கப்பட்டது.கூட்டத்தில், ஹிந்து முன்னணி மாநில செயலாளர் கிேஷார்குமார் பேசியதாவது:தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் குளறுபடி உள்ளது.

கடைசியாக கோர்ட் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, வீடு மற்றும் கோவில்களின் முன், சிலைகள் வைத்து வழிபடலாம். அதன்படி, கடந்தாண்டு வழிபாடு நடத்தப்பட்டது.மாறாக, இந்தாண்டு சிலை வைக்கக்கூடாது என்று கூறுவதை ஏற்க முடியாது. பிற மதத்தினர் பண்டிகைக்கு கட்டுப்பாடு விதிக்காத மாவட்ட நிர்வாகம், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கட்டுப்பாடு விதிப்பது தவறானது; மாவட்ட நிர்வாகம் ஒரு தலைபட்சமாக நடக்கக்கூடாது. விநாயகர் சதுர்த்தி விழாவை கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் நடத்த, மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.ஹிந்து மக்கள் கட்சி, பாரத்சேனா உள்ளிட்ட ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X