4,600 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

4,600 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணி

Added : செப் 09, 2021
Share
கூடலுார் : முதுமலை, மசினகுடி பகுதியில் வனத்துறை சார்பில், 4,600 கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி போடும் முகாம், துவங்கியது.முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, மசினகுடி சுற்றுப்புற கிராமங்களில், வளர்ப்பு கால்நடைகளுக்கு, வனத்துறை சார்பில், இலவச தடுப்பூசி போடும் முகாம், நேற்று, துவங்கியது. மசினகுடியில், நடந்த முகாமை துணை இயக்குனர் அருண்குமார் துவக்கி வைத்தார்.தொடர்ந்து,

கூடலுார் : முதுமலை, மசினகுடி பகுதியில் வனத்துறை சார்பில், 4,600 கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி போடும் முகாம், துவங்கியது.

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, மசினகுடி சுற்றுப்புற கிராமங்களில், வளர்ப்பு கால்நடைகளுக்கு, வனத்துறை சார்பில், இலவச தடுப்பூசி போடும் முகாம், நேற்று, துவங்கியது. மசினகுடியில், நடந்த முகாமை துணை இயக்குனர் அருண்குமார் துவக்கி வைத்தார்.தொடர்ந்து, அரசு கால்நடை பராமரிப்பு துறை கால்நடை டாக்டர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து, கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல், குடல்புழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில்,'வளர்ப்பு கால்நடைகளுக்கு, வனத்துறை சார்பில், நடப்பு ஆண்டுக்கான தடுப்பூசி போடும் முகாம் 10ம் தேதி வரை நடக்கும் இதில், 4,600 கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,' என்றனர். நிகழ்ச்சியில், வனச்சரகர் மாரியப்பன், முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X