பொது செய்தி

தமிழ்நாடு

தோட்டக்கலை பூங்கா ஐ.எஸ்.ஓ., தரச்சான்று

Added : செப் 09, 2021
Share
Advertisement
ஊட்டி : நீலகிரியில், தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களுக்கு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை துறையின் கட்டுப்பாட்டில், 5 பூங்காக்கள், 10 தோட்டக்கலைப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. ஐ.எஸ்.ஓ., எனப்படும் உலக தரக்கட்டுப்பாட்டு கழகம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு அழகியல் மற்றும் தொழில்நுட்ப பூங்கா மேலாண்மைக்கான சான்று

ஊட்டி : நீலகிரியில், தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களுக்கு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை துறையின் கட்டுப்பாட்டில், 5 பூங்காக்கள், 10 தோட்டக்கலைப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. ஐ.எஸ்.ஓ., எனப்படும் உலக தரக்கட்டுப்பாட்டு கழகம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு அழகியல் மற்றும் தொழில்நுட்ப பூங்கா மேலாண்மைக்கான சான்று வழங்கப்படுகிறது. அதில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா; ஊட்டி, அரசு ரோஜா பூங்கா, குன்னுார், சிம்ஸ் பூங்கா, தரமான நடவு பொருள் உற்பத்தி மற்றும் விவசாயிகளுக்கான தொழில் நுட்பத்திற்காக பர்லியார் அரசு தோட்டக்கலைப் பண்ணைக்கும் தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இச்சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, தோட்டக்கலை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ் மற்றும் அலுவலர்களிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X