சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து

Added : செப் 09, 2021
Share
Advertisement
வானுார்-பெயின்ட் ஏற்றிச்சென்ற பொலிரோ வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.புதுச்சேரி அடுத்த சேதராப்பட்டு ஏசியன் பெயின்ட் கம்பெனியில் இருந்து நேற்று காலை பொலிரோ வேன் (பிஒய்.05.வி.3088) பெயின்ட் ஏற்றிக்கொண்டு, திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருந்தது. வேனை வில்லியனுாரை சேர்ந்த டிரைவர் சதீஷ்குமார், 38; ஓட்டினார். கொடுக்கூரை சேர்ந்த கார்த்திக், 21, உடன் வந்தார்.புதுச்சேரி -

வானுார்-பெயின்ட் ஏற்றிச்சென்ற பொலிரோ வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.புதுச்சேரி அடுத்த சேதராப்பட்டு ஏசியன் பெயின்ட் கம்பெனியில் இருந்து நேற்று காலை பொலிரோ வேன் (பிஒய்.05.வி.3088) பெயின்ட் ஏற்றிக்கொண்டு, திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருந்தது. வேனை வில்லியனுாரை சேர்ந்த டிரைவர் சதீஷ்குமார், 38; ஓட்டினார். கொடுக்கூரை சேர்ந்த கார்த்திக், 21, உடன் வந்தார்.புதுச்சேரி - திண்டிவனம் சாலையில், மொளசூர் ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகில் காலை 11:00 மணியளவில் வந்தபோது வேனின் முன்பக்க இடதுபுற டயர் வெடித்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் இருந்த டப்பாக்களில் இருந்து பெயின்ட் சாலையில் கொட்டியது.வேனில் இருந்த இருவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் டோல்கேட் ஊழியர்கள் விரைந்து வந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர்.சாலையில் கவிழ்ந்த வேனை, கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். பெயின்ட் மீது, மண் கொட்டி சுத்தம் செய்தனர். விபத்து குறித்து கிளியனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X