சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜாமினில் வந்த கொலை குற்றவாளி செஞ்சி கோட்டையில் தற்கொலை

Added : செப் 09, 2021
Share
Advertisement
செஞ்சி-கள்ளக் காதலியின் கணவரை கொலை செய்து புதைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்தவர், செஞ்சி கோட்டையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தை சேர்ந்தவர் லியோபால். இவரது மனைவி சுஜித்தாமேரி. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் லியோபால் காணாமல் போனார்.

செஞ்சி-கள்ளக் காதலியின் கணவரை கொலை செய்து புதைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்தவர், செஞ்சி கோட்டையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தை சேர்ந்தவர் லியோபால். இவரது மனைவி சுஜித்தாமேரி. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் லியோபால் காணாமல் போனார். அடுத்த சில நாட்களில் சுஜித்தா மேரியும் காணாமல் போனார். இதுகுறித்து, லியோபாலின் தந்தை சகாயராஜ் விக்கிரவாண்டி போலீசில் புகார் செய்தார். போலீஸ் விசாரணையில் சுஜித்தாமேரிக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராக்கி (எ) ராதாகிருஷ்ணன், 24, என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்தது. லியோபால் வீட்டின் பின்புறம் துர்நாற்றமும் வீசியது. தோண்டி பார்த்ததில் அங்கு லியோபால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தார். அவரை சுஜித்தமேரியும், ராதாகிருஷ்ணனும் கொலை செய்து புதைத்தது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த இருவரையும் விக்கிரவாண்டி போலீசார் கைது செய்தனர். ஏழு மாதமாக கடலுார் மத்திய சிறையில் இருந்த ராதாகிருஷ்ணன், கடந்த வாரம் ஜாமினில் வந்தார். கடந்த 6ம் தேதி குடும்பத்தினரிடம் ஓசூர் செல்வதாக கூறி சென்றார்.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, செஞ்சி கோட்டை சிவன் கோவில் பகுதியில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து ஒருவர் இறந்து கிடப்பதாக செஞ்சி போலீசாருக்கு தகவல் வந்தது. செஞ்சி டி.எஸ்.பி., இளங்கோவன், இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்தவர் ஜாமினில் வந்த ராதாகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X