சம்பவம் செய்தி

தமிழ்நாடு

1,500 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் வேப்பூர் அருகே இருவர் கைது

Added : செப் 09, 2021
Share
Advertisement
கடலூர்-வேப்பூர் அருகே, கோழி தீவனத்திற்காக 1,500 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி சென்ற இருவரை போலீசார் கைது செய் தனர்.கடலுார் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் கவியரசன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு வேப்பூர் அருகே காஞ்சிராங்குளம் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, வேப்பூர்- சேலம் சாலையில்

கடலூர்-வேப்பூர் அருகே, கோழி தீவனத்திற்காக 1,500 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி சென்ற இருவரை போலீசார் கைது செய் தனர்.கடலுார் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் கவியரசன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு வேப்பூர் அருகே காஞ்சிராங்குளம் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, வேப்பூர்- சேலம் சாலையில் வேகமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், 1,500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். வேப்பூர் அடுத்த மங்களூரை சேர்ந்த சித்திரவேல், 59; திட்டக்குடி அடுத்த மேல்ஆதனுாரை சேர்ந்த வெங்கடேசன் மகன் விக்னேஷ், 24 என்பது தெரிய வந்தது. இருவரும் மங்களூர், லட்சுமணபுரம், வேப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, கோழி தீவனத்திற்காக சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதிக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிந்து, சித்திரவேல், விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அரிசி கடத்த பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் மற்றும் தலா 50 கிலோ எடை கொண்ட 30 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X