சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டி.வி., வாங்கி தருவதாக மோசடிபோலீசார் விசாரணை

Added : செப் 09, 2021
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் அருகே குறைந்த விலையில் டி.வி., தருவதாக கூறி, வாலிபரிடம் பணமோசடி செய்த தனியார் நிறுவனத்தினரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த கோலியனுாரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்,31; இவர், டி.வி., வியாபாரம் செய்வதற்காக ஒரு இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். இதை கண்ட, தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், கிருஷ்ணகுமாரை மொபைலில் தொடர்பு கொண்டு குறைந்த விலையில்

விழுப்புரம்-விழுப்புரம் அருகே குறைந்த விலையில் டி.வி., தருவதாக கூறி, வாலிபரிடம் பணமோசடி செய்த தனியார் நிறுவனத்தினரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த கோலியனுாரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்,31; இவர், டி.வி., வியாபாரம் செய்வதற்காக ஒரு இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். இதை கண்ட, தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், கிருஷ்ணகுமாரை மொபைலில் தொடர்பு கொண்டு குறைந்த விலையில் மொத்தமாக டி.வி.,க்களை வியாபாரத்திற்கு தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பி கிருஷ்ணகுமார், அந்த நபர் கூறியதன் பேரில், அந்த நிறுவன வங்கி கணக்கிற்கு 57 ஆயிரம் ரூபாயை முன்பணமாக அனுப்பியுள்ளார்.பணத்தை பெற்ற அந்த நிறுவனத்தினர், கிருஷ்ணகுமாருக்கு டி.வி.,க்களை அனுப்பாமல் மோசடி செய்துள்ளனர். கிருஷ்ணகுமார் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து தனியார் நிறுவனத்தினரை தேடி வருகின்றனர்.

 
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X