சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியலில் குளறுபடி கிராம மக்கள் சாலை மறியல்

Added : செப் 09, 2021
Share
Advertisement
கச்சிராயபாளையம்-எடுத்தவாய்நத்தம் ஊராட்சியில் வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகளை சரிசெய்யக்கோரி கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.கச்சிராயபாளையம் அடுத்த எடுத்தவாய்நத்தம் ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளது. உள்ளாட்சி தேர்தலையொட்டி,கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில், இறந்தவர்களின் பெயர்கள் உள்ளது. ஒரே வாக்காளரின்பெயர்

கச்சிராயபாளையம்-எடுத்தவாய்நத்தம் ஊராட்சியில் வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகளை சரிசெய்யக்கோரி கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.கச்சிராயபாளையம் அடுத்த எடுத்தவாய்நத்தம் ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளது. உள்ளாட்சி தேர்தலையொட்டி,கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில், இறந்தவர்களின் பெயர்கள் உள்ளது. ஒரே வாக்காளரின்பெயர் இரண்டுக்கும் மேற்பட்ட முறை உள்ளது உட்பட பல குளறுபடிகள் இருப்பதாக பொதுமக்கள் புகார்தெரிவித்தனர்.இதனை சரிசெய்யக்கோரி கிராம மக்கள் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மனு அளித்தனர்.மனு தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள்பார்வைக்கு வாக்காளர் பட்டியல் வைக்கவில்லை எனக்கூறி, அப்பகுதி மக்கள் எடுத்தவாய்நத்தம் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று மதியம் 2 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த கச்சிராயபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, பேச்சு வார்த்தைநடத்தி, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X