பொது செய்தி

தமிழ்நாடு

ஹயக்கிரீவர் கோவிலில் ரூ.1.25 லட்சம் காணிக்கை

Added : செப் 09, 2021
Share
Advertisement
கடலுார்-திருவந்திபுரம் ஹயக்கிரீவர் கோவில் உண்டியலில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 159 காணிக்கை செலுத்தப்பட்டு இருந்தது.பிரசித்திப் பெற்ற கடலுார் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் மலை மீது ஹயக்கிரீவர் கோவில் உள்ளது. இங்கு கடந்த வாரம் ஹயக்கிரீவர் ஜெயந்தி விழா நடந்தது. இதனையொட்டி கோவில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது.இந்து சமய அறநிலையத் துறை

கடலுார்-திருவந்திபுரம் ஹயக்கிரீவர் கோவில் உண்டியலில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 159 காணிக்கை செலுத்தப்பட்டு இருந்தது.பிரசித்திப் பெற்ற கடலுார் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் மலை மீது ஹயக்கிரீவர் கோவில் உள்ளது. இங்கு கடந்த வாரம் ஹயக்கிரீவர் ஜெயந்தி விழா நடந்தது. இதனையொட்டி கோவில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது.இந்து சமய அறநிலையத் துறை ஆய்வர்கள் கடலுார் சரகம் சுபத்ரா, பண்ருட்டி சரகம் ஸ்ரீதேவி ஆகியோர் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில், 1 லட்சத்து 25 ஆயிரத்து 159 ரூபாய் ரொக்கத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கோவில் நிர்வாக அதிகாரி முருகன் உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X